கல்யாணத்துக்கு மோடி அமித்ஷானு ஆயிரம் பேர் வந்தாலும் அ.தி.மு.க.தான் மாப்பிள்ளை ! செல்லூர் ராஜூ கலகல !
பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர்அடிக்கடி பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார்கள்...
கல்யாணத்துக்கு மோடி அமித்ஷானு ஆயிரம் பேர் வந்தாலும் அ.தி.மு.க.தான் மாப்பிள்ளை ! செல்லூர் ராஜூ கலகல !
மதுரையில் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டு கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது, “பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக அ.தி. மு.க.வுக்கு ஆதரவு அளிக்குமாறு பேராயரை சந்தித்தேன் அப்போது அவர் மத்திய பா.ஜ.க. கூட்ட ணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது சரியான முடிவு என தெரிவித்தார். மேலும், இனி வரும் காலங்களிலும் அ.தி.மு.க. இதே நிலையை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர்அடிக்கடி பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார்கள் தேர்தல் என்றால் அரசியல் தலைவர்கள் வரத்தான் செய்வார்கள். கல்யாணத்திற்கு நண்பர்கள் உறவினர்கள் வருவதுபோல் தேர்தலுக்கு தலைவர்கள் வருகிறார்கள்.
ஆனால், கல்யாணத்தில் மாப்பிள்ளை யார் ? என்பது தான் முக்கியமான விஷயம். அந்த வகையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க.தான் மாப்பிள்ளை என நகைச்சுவையாக கூறினார்.
இதையடுத்து நிருபர்கள், ”ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தேர்தலிலும் தோல்வி அடையும் என தினகரன் கூறியுள்ளாரே?” என கேட்டனர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, ”தினகரன் எப்போதில் இருந்து ஜோசியர் ஆனார்? என தெரியவில்லை” என்றார்.
ஷாகுல், படங்கள் – ஆனந்த்.