அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் மளமகிழ் சங்கமக்கூட்டம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

தஞ்சாவூர் மாவட்டத்தில மூத்த குடி மக்கள் நலச்சங்கத்தின்  மளமகிழ் சங்கமக்கூட்டம் (28.10.2025) அன்று சங்கத்தின் (அறக்கட்டளையின் தலைவர் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ. செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்வில்  கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. உச்ச நீதிமன்றம் கிராமப்புறங்களில் 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளைத்திறக்க அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியி பேரிடியாக அதிர்ச்சியூட்டும் செய்தியாக வந்து விழுந்திருக்கிறது. பொதுமக்கள் உடல்நலமும் பொருள்நலமும் காத்திட உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்ற இச்சங்கம் வேண்டிக்கொள்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2. மாநகராட்சியின் புறநகர்ப்பகுதிகளில் குறிப்பாக நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கிய நகருக்கு தெற்கே பைபாஸ் சாலைக்கு இடைப்பட்டுள்ள அஜீஸ்நகர், ஜமால்உசேன் நகர், பார்வதி நகர், கௌலெட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பன்றிகள் திரிவதும் வீட்டின் முன்புறம் பின்புறம் குழிகள் பறித்துக் கூடாரமடித்து வாழ்வதும் பெரும் தொல்லையாய் அமைகிறது.

அத்தோடு நாஞ்சிக்கோட்டைப் பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடும் கொசு உற்பத்தியால் பல நோய்கள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பன்றிகளை விரட்டியும் சுகாதாரக் கேடுகளை அகற்றிடவும் மாவட்ட ஆட்சியரையும் உள்ளாட்சி நிர்வாகத்தையும் இச்சங்கம் வற்புறத்தி வேண்டிக்கொள்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மிக விரைவில் நடிவடிக்கை எடுத்து இப்பகுதிகளில் வாழ்பவர்களும் மனிதர்களே என்ற கண்ணோட்டத்தில் உடன் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

விரைவில் நடவடிக்கை எடுக்களில்லை எனில் அந்தப் பகுதிவாழ் பொதுமக்கள் அனைத்து அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்புக்கள் கூட்டி மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

3. பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருத்து நிலையத்திற்க்கு நாஞ்சிக்கோட்டை சாலை E.B.காலனி வழியாக மாதாக்கோட்டை வழியாக நகரப்பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்திட போக்குவரத்துத் துறையைக் கேட்டுக்கொள்வதோடு தஞ்சாவூர் எட்ட மறை உறுப்பினர் திரு T.KG நீலமேகம் இதற்கான ஏற்பாட்டைச் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.

4. நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் உள்ள சாலை வேகத்தடைகள் அனைத்திற்கும் அழியாத பெயிண்ட் வெள்ளைக் கோடு போட்டு வாகன ஓட்டிகளின் விபத்துக்களைத் தடுத்திட வேண்டும் என மாநாகராட்சியையும் உள்ளாட்சித்துறையையும் மூத்த குடிமக்கள் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 —  தஞ்சை க.நடராஜன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.