அங்குசம் சேனலில் இணைய

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெண்ணை பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த குற்றத்திற்கு இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அரியலூர் மாவட்ட போலீசார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 2024 அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 28)  த/பெ சௌந்தர்ராஜன் என்பவர் வேறு ஒரு ஊரைச் சேர்ந்த பெண்ணை  கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்கிருந்து தப்பித்த பெண், அளித்த புகாரின் அடிப்படையில் 26.02.2024 அன்று மாலை விக்கிரமங்கலம்  காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்யப்பட்டது. அப்போதைய உடையார்பாளையம் வட்ட  காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் புலன் விசாரணைகள் மேற்கொண்டு எதிரி கொளஞ்சிநாதனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள்.

இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 17.09.2025 அன்று மகிளா நீதிமன்ற நீதிபதி மணிமேகலை அவர்கள் எதிரி கொளஞ்சிநாதனுக்கு பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் (அபராதமும் கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனை).  மேலும் தன்னிச்சையாக காயம் விளைவித்த குற்றத்திற்கு 1ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் (அபராதம் கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை ) விதித்து தீர்ப்பளித்தார்கள். இதனையடுத்து கொளஞ்சிநாதனை திருச்சி மத்திய சிறையிலடைத்ததாக” அரியலூர் மாவட்ட போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

  —     அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.