திருச்சியில் கைதான ரவுடிகள் தப்பிய போது துப்பாக்கி சூடு – கைது வீடியோ !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் காவல்துறையினரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் இரண்டுபேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிடு சூடு நடத்தினர்.  திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும் சகோதரர்கள்.

இதில் துரைசாமி என்பவர் மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5கொலை வழக்குகள் என 69 வழக்குகள் உள்ளது.  இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளது. சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற இளவரசன் கொலைவழக்கிலும் முக்கிய குற்றவாளிகள்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

வீடியோ லிங்

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த நிலையில் அதிகாலையில் காவல்துறையில் அவர்கள் வீட்டில் வைத்து  துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்து அந்த வழக்கு  தொடர்புடைய நகைகளை குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக  காவல்துறையினரிடம் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க காவல்துறையினரை அவர்கள் இருவரையும் குழுமாயி அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் இருவரும் காவல்துறையினரை தள்ளிவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கி தப்பித்துள்ளனர்.  இருவரையும் காவல்துறையினர் விரட்டி பிடிக்கும் என்ற போது அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளை பிடிக்கவும் இருவரையும் காலில் சுட்டு காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளையும் காவல்துறையினரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சுடப்பட்டது குறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா பத்திரிகையாளர்களிடம் சுடப்பட்ட இருவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

திருச்சி ரவுடிகள் மீது துப்பாக்கி சுடு
திருச்சி ரவுடிகள் மீது துப்பாக்கி சுடு

அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாகவும் இருந்தனர். திருச்சியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.  அப்போது அவர்கள் போலிசாரை தாக்கிவிட்டு தப்பித்து செல்ல முயன்று உள்ளனர். எனவே துப்பாக்கிசுடு நடத்த வேண்டிய கூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  போலிசார் தங்கள் உயிர்களை தற்காத்துக்கொள்ள இந்த துப்பாக்கி சுடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை அழைத்து செல்லும் போது போலிசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு  இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.