சிறு குறு தொழில்களின் வளா்ச்சிப்பாதையில் SIDBI வங்கி!
Small industries Development Bank of India
சிறு தொழில் வளா்ச்சி வங்கியின் கிளை அந்நிறுவனத்தால் திருச்சியில் துவக்கப்பட்டுள்ளது. திருச்சி தில்லைநகா் 7-வது தெருவில் 14.10.24 அன்று காலை திறப்பு விழாவும் தொடா்ந்து திருச்சியில் (முன்னாள் சங்கம் ஹோட்டலில்) கோர்ட்யார்ட்டில் வங்கியின் செயல் விளக்க உரையுடன் துவக்க விழா நடைபெற்றது.
வங்கியின் நிர்வாக அதிகாரி, பொது மேலாளா் திருச்சியின் கிளை மேலாளா் ஆகியோருடன் இணைந்து திருச்சி மாவட்ட சிறு குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவா் திரு.பே.ராஜப்பா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
சிறு தொழில் துறையில் தற்போது பல புதிய வாய்ப்புகளுடன் வளா்ச்சிப்பாதையில் பயனிக்கத் துவங்கியிருக்கும் திருச்சிக்கு இந்த SIDBI (Small industries Development Bank of India) வங்கி ஒரு வரப்பிரசாதமாகும்.
சிறு தொழில் வளா்ச்சிக்கு அவசியமான, அத்தியாவசியத் தேவைகளின் அவசியத்திற்கும் அதன் வளா்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆலோசனை வழங்கும் பணியையும் SIDBI மேற்கொண்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியின் கடனுதவி பெறும் நடைமுறைப் பணிகளை எளிதாகவும், தொடா் வழிகாட்டுதலும் வங்கியின் சிறப்பம்சமாகும்.
வங்கி அதிகாரிகளின் அணுகு முறை அவா்கள் சிறு தொழில்கள் மீது காட்டும் அக்கறையும் எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் சிறு தொழில்துறை வெற்றிப்பாதையில் பயணிக்கும் என்பதை SIDBI யின் துவக்க விழா உணா்த்தியது.
வங்கியின் வரை முறைகளைப் பின்பற்றி தொழிலுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு தெளிவான திட்ட மதிப்பீட்டுடன் வங்கியை அணுகினால் நிச்சமாக வெற்றித் தொழில் முனைவோராக உயர முடியும்.
தகவல் :
ஆர்.சண்முகம்,
துணைத்தலைவர்,
திருச்சி மாவட்ட குறு சிறு தொழில்கள் சங்கம்.