முசிறி மேக்னா சில்க்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
முசிறி மேக்னா சில்க்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
திருச்சி மாவட்டம் முசிறி மேக்னா சில்க்ஸ்க்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு, குடோன், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் இரவு பகலாக சுழற்சி முறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெண் அதிகாரி ஒருவர் உள்பட 15-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனையில் ஒரு குழுவினர் இரவு 8.30 மணியளவில் சில ஆவணங்களை கடையிலிருந்து கைப்பற்றி சென்றனர்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்கும் பொழுது எவ்வித பதிலும் அளிக்காமல் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர் மேலும் கடையில் உள்ள மொத்த ஜவுளி ரகங்கள் எண்ணிக்கைகளையும் அதன் மதிப்பீடும், குடோன்களில் உள்ள 106 மூட்டைகளை பிரித்து அதில் உள்ள ஜவுளி ரகங்கள் மதிப்பு கணக்கிட்டு கொண்டு வருகின்றனர்.
தொடர் சோதனை என்பது இன்னும் இரு தினங்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.