SIR-ஐ நிறுத்தம் செய்க! கோரிக்கை வைத்த வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம்!
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத்திருத்தத்தை (SIR) உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம் மதுரையில் கோரிக்கை வைத்ததுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில்உள்ள மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ஹென்றி தீபன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தேர்தல் ஆணையம் நடத்தும் SIR தீவிர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்னும் செயல் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம்சாட்டினார். பீகாரில் இதே திருத்தத்தின் போது 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதையும், பெரும்பாலானோர் பெண்கள், முஸ்லீம்கள் மற்றும் விளிம்புநிலை மக்களாக இருந்ததையும் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை SIR அறிவிப்பை நிறுத்தி வைத்து, வழக்கமான SSR முறையில் வாக்காளர் பட்டியலை திருத்த வேண்டும் என்றும், பீகார் போன்ற மாநிலங்களில் நீக்கப்பட்ட வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 33 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.