பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளிக்கு பிடித்த  மாவிளக்கு பூஜை ! ஆடிவெள்ளியில் குவிந்த பக்தர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார்கள்.

சிறுவாச்சூர் மதுரகாளிதிருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அடுத்து அமைந்திருக்கிறது சிறுவாச்சூர். மதுரையை எரித்த கண்ணகி சற்றே கோபம் தணிந்து, இங்கே மதுர காளியம்மனாக குடிபுகுந்ததாக தல வரலாறு. இந்தக் கோயிலின் சிறப்பம்சமே, மாவிளக்கு வழிபாடுதான். கோயில் எங்கும் உரல்களும், உலக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மாவிளக்கு பூஜை
மாவிளக்கு பூஜை

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

கோயிலுக்கு வரும்போதே கையோடு மாவிளக்கு தயாரிக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம் கொண்டு வருகிறார்கள். கோயில் சன்னதியில் வைத்து ஊர வைத்த அரிசியை இடித்து, மாவிளக்கு தயாரித்து, அதன் மையத்தில் எண்ணெய் ஊற்றி காளியம்மன் சன்னதியில் வைத்து விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மாவிளக்கு பூஜை உடலில் எந்த பிரச்சினை என்றாலும், பிரச்சினைக்குரிய இடத்தில் மாவிளக்கை வைத்து தீபம் ஏற்றினால் அந்த சிக்கல் தீரும் என்பதை நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள், பக்தர்கள்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பதவியேற்றிருக்கும் ச.அருண்ராஜ், வாரம் தவறாமல் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலுக்கு வந்து செல்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தின் அடையாளமாக திகழும், மதுர காளியம்மன் கோயில் ஆடி வெள்ளி சிறப்பு தரிசனத்திலும் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்.

 

 —          ரூபன்ஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.