அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

IAS அதிகாரிக்கு இந்த நிலையா? ஆட்டம் காட்டும் ED !

திருச்சியில் அடகு நகையை விற்க

குஜராத் மாநிலத்தின் சுரேந்தர்நகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திரகுமார் பட்டேல் IAS அமலாக்கத்துறையால் 02-01-2026 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். மொத்த இந்தியாவும் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது.

ஒருவரை ஒழித்துக்கட்ட (IAS அதிகாரியாகவே இருந்தாலும்) அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக வேலை செய்யும் என்பதற்கு இந்த வழக்கு மிகப்பெரிய உதாரணம்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2015 ஆண்டு Batch அதிகாரியான Dr.ராஜேந்திரகுமார் பட்டேல் அடிப்படையில் ஒரு BDS மருத்துவர். சூரத் மாநகராட்சியின் துணை ஆணையாளராக பணியாற்றி வந்த அவர் 01-02-2025 அன்று தான் சுரேந்தர்நகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.

துணை தாசில்தார் வீட்டில் சிக்கிய 67 லட்சம்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

23-12-25 அன்று அமலாக்கத்துறையின் Head Quarters Investigation Unit பதிவு செய்த ECIR/HIU-11/42/2025 -ன் படி சுரேந்தர் நகர் மாவட்டத்தின் துணை தாசில்தார் Chandrasinh Mori என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. Land Scam தொடர்பாக,அதாவது நிலத்திற்கு அனுமதி அல்லது தடையில்லா சான்று அல்லது வகைமாற்றம் தொடர்பான கோப்புகளுக்கு லஞ்சம் பெறப்படுவது குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த சோதனையை ED மேற்கொள்கிறது.

Mori-ன் வீட்டில் இருந்து 67.50 லட்சம் ரொக்கமும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.  ஆனால், ED-ன் டெல்லி தலைமை அலுவலக யூனிட் எந்த காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட  மூலவழக்கின் FIR-ஐ அடிப்படையாக கொண்டு ECIR-ஐ பதிவு செய்தது என்று எந்த விபரங்களும் இதுவரை வெளிவரவில்லை.

சந்திரசிங் மோரி
சந்திரசிங் மோரி

மாவட்ட ஆட்சியர் கைதுக்கு காரணமென்ன ?

23-12-2025 அன்று துணை தாசில்தார் சந்திரசின் மோரியின் வீட்டில், காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொள்கின்றனர்.

அப்போது,வசூலிக்கப்படும் லஞ்சப்பணத்தில் ஆட்சியருக்கும் பங்கு உண்டு என சந்திரசின் மோரி கூறியதாக  குறிப்பிட்டு அன்றே  (23-12-25) குஜராத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குருக்கு ED-ன் துணை இயக்குநர் சித்தார்த் ஜெயின் என்பவர் ரகசிய கடிதம் எழுதுகிறார்.

அதன் அடிப்படையில் சுரேந்தர்நகர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்நிலையத்தில் 24-12-25 அன்று Rajendrakumar patel IAS-ன் பெயரையும் இணைத்து 4 நபர்கள் மீது FIR பதிவு செய்யப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட FIR காலை 10:15 மணிக்கு நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கபடுகிறது..உடனடியாக ஆட்சியர் பொறுப்பில் இருந்து ராஜேந்திரகுமார் விடுவிக்கப்படுகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பழிவாங்கப்படுகிறாரா Rajendra Kumar Patel IAS ?

23-12-25 நடத்திய சோதனை மற்றும் விசாரணையில் துணை தாசில்தார் ஆட்சியரின் பெயரை கூறியுள்ளதாக, குறிப்பிட்டு ED அன்றே இரவு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 7 பக்கத்திற்கு கடிதம் எழுதுகிறது.இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், விழிப்பு ஆணையருக்கு கடிதம் எழுத வேண்டும்,விழிப்பு ஆணையர் Secret and Confidential Department க்கு கடிதம் எழுத வேண்டும் அந்த தகவல் தலைமை செயலாளர் மூலமாக முதலமைச்சருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

வழக்கமாக கடிதங்கள் இப்படி நகர்ந்து FIR பதிவு செய்யப்பட குறைந்தது ஒரு வருடம் ஆகிவிடும். ஆனால், ராஜேந்திரகுமார் விவகாரத்தில்அடுத்த சில மணிநேரங்களில் குஜராத் அரசு IAS அதிகாரி மீது FIR பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதியளிக்கிறது. Preliminary Enquiry இல்லை. Detailed Enquiry இல்லை. ED-ன் கடிதம் கிடைத்த 12 மணிநேரத்தில் FIR பதிவு செய்யப்படுகிறது. இத்தனை வேகமாக ஒரு IAS அதிகாரியின் மீது FIR பதியப்பட்டது என்பதெல்லாம் இதுவரை கேள்விப்படாத ஒன்று.

ராஜேந்திரகுமார் பட்டேல் IAS
ராஜேந்திரகுமார் பட்டேல் IAS

02-01-26 அன்று IAS அதிகாரி ராஜேந்திரகுமாரை அமலாக்கத்துறை கைது செய்கிறது. நீதிமன்றத்தால் 5 நாட்கள் கஸ்டடி வழங்கப்படுகிறது. @ANI மூலமாக மொத்த இந்தியாவிற்கும் செய்தி கொண்டு செல்லப்படுகிறது. இதோ 04-01-2026 அன்று Rajendrakumar Patel,IAS-ஐ Suspend செய்து குஜராத் அரசின் பொது நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த Confidential உத்தரவை ANI ஏஜென்சியிடம் கொடுத்து செய்தியாக வெளியிட வைத்துள்ளனர். (https://x.com/ani/status/2007870446637838367?s=46)

கவனிக்க வேண்டியது என்னவென்றால்… ECIR/HIU-11/42/2025 -ன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில் தான் லஞ்சஒழிப்புத்துறைக்கு கடிதமும் எழுதப்பட்டது.

ஆனால், குஜராத் லஞ்சஒழிப்புத்துறை சுரேந்தர்நகர் காவல்நிலையத்தில் ராஜேந்திரகுமார் படேல் மீது FIR பதிவு செய்யப்பட்டவுடன் அமலாக்கத்துறையின்  Head Quarters Investigation Unit சார்பில் ECIR/HIU-11/43/2025 என்ற புதிய ECIR பதிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் ராஜேந்திரகுமார் படேல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

அப்படி என்றால்.,அமலாக்கத்துறை சோதனை நடத்தி கடிதம் எழுதுவதற்கு காரணமாக இருந்த ECIR/HIU-11/42/2025-ன் மூல வழக்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.

தெளிவாக திட்டமிட்டு ஒரு இளம் IAS அதிகாரியை இந்த விவகாரத்தில் சிக்க வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது ?

ED  எழுதிய ரகசிய கடிதமும்,அதன் மீது குஜராத் அரசும்,மாநில லஞ்ச ஒழிப்புத்துறையும் காட்டியுள்ள வேகமும் அசாதாரணமானது. மிகவும் முக்கியத்துவம் வழக்காக இந்த வழக்கு நிச்சயம் மாறும். ராஜேந்திரகுமார் பட்டேல் என்ற  இளம் IAS அதிகாரிக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். @IASassociation இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியதும் அவசியம்.

—     அரவிந்த்தக்ஷன், மூத்த பத்திரிகையாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.