AI தொழில்நுட்பம் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்த கனிமொழி எம்பி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான AI தொழில்நுட்பம் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை கனிமொழி எம்பி தொடங்கி வைத்து பேசுகையில்,
ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் AI தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.
AI தொழில்நுட்பம் பற்றி பல்வேறு தகவல்களை நம்ம மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஒரு பயிற்சியாளர் அளவிற்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடியவர்.
முன்பு ஒரு தகவலைப் பெற Googleல் தேடிப் பெற வேண்டும். ஆனால் தற்போது AI தொழில் நுட்பமே அதனைத் தேடி கொடுத்து விடுகிறது.
இன்றைக்கு அறிவுதான் பவர். ஆண் பெண் என்ற வித்தியாசம் கிடையாது யாருக்கு அறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்கிறதோ அவர்கள்தான் இன்றைக்கு கொடிகட்டி பறந்து எல்லாரையும் விட தலை சிறந்தவர்களாக இருக்கக்கூடியவர்கள் அவர்கள்தான்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டோம். எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் AI தொழில்நுட்பம் இருக்கும்
எதிர்காலத்தில் மாணவர்கள் இந்த உலகத்தை வெல்லக்கூடியவர்களாக, இந்த உலகத்தை உங்கள் குடையின் நிழலின் கீழ் கொண்டு வரக்கூடியவர்களாக , வெற்றி பெற்றவர்களாக, இந்த சமூகத்தை மாற்றி அமைக்கக்கூடியவர்களாக நீங்க வரவேண்டும் என்றார்.
தொடர்ந்து கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தையும் கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
— மணிபாரதி