இலட்ச கணக்கில் செலவு செய்து டிவி வாங்குவதை விட…
60 இன்ச் 100 இன்ச் டிவிக்கள் 70 ஆயிரம் 1 லட்சம் கொடுத்து வாங்குவதைப் பற்றிப் பலர் கேட்கிறார்கள். அதைக் காட்டிலும் சிக்கனமானது ஒரு ப்ரொஜக்டர் + சவுண்ட்பார் வாங்கி வீட்டு சுவற்றில் 5 அடிக்குப் 10 அடியோ அல்லது உங்கள் சுவற்றின் அளவு பொறுத்துப் படம் பார்ப்பதுதான்.
சுவர் வெள்ளையாக இருந்தால் ஸ்க்ரீன் கூடத் தேவையில்லை. அமேசானில் இப்படிப்பட்ட சைனா ப்ரொஜக்டர்கள் 15 ஆயிரத்துக்குள் கிடைக்கும். 2.1 சவுண்ட்பார் 6000 க்குள் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் டிவியில் ஒரு பயர் ஸ்டிக்கை சொருகிவிட்டால் டிவியும் 3000 செலவில் ஸ்மார்ட் டிவி ஆகிவிடும்.
15-20 ஆயிரம் செலவில் ஒரு பக்கா ஹோம் தியேட்டர் செட் செய்து படமோ, கிரிக்கெட்டோ பெரிய ஸ்க்ரீனில் பார்க்கலாம். மிச்சப் பணத்தை மார்கெட்டில் போடலாம். அல்லது வங்கி.
முக்கிய ஓ டி டி சப்ஸ்க்ரிப்ஷன்கள் வருடம் 7200க்குள் வருகிறது. ஜியோ சிம் இருந்தால், ஹாட்ஸ்டார் ஃப்ரீ. அல்லது தேவையானதை மட்டும் மாதம் சப்ஸ்கிரைப் செய்து பார்க்கலாம்.
Zeebronics கூட இப்பொழுது ப்ரொஜக்டர்கள் சந்தையில் கொண்டு வந்திருக்கிறார்கள். தூசி படாமல் பார்த்துக்கொண்டால் தாராளமாக 5 வருடங்கள் வரும்.
Netflix – 1788
Amazon prime – 1500
Sony Liv – 1500
Zee Tamil – 949
Sun Nxt – 700
₹7200 / year
₹600/ month
Projector 15000
Soundbar – 6000
= 28200
30 ஆயிரம் கிட்ட வருதே என்று மலைக்கவேண்டாம். ஒரு சினிமா குடும்பத்தோடு பார்க்க மாதம் 1500-3000 செலவழிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. ஓ டி டி யில் படம் வரும்வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.
ஒருமுறை படத்தையோ, கிரிக்கெட்டையோ ப்ரொஜக்டரில் பார்த்துவிட்டால், டிவி பக்கமே செல்ல மாட்டீர்கள்.