அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சமூகம் மக்களை எப்படி எல்லாம் ஜட்ஜ் பண்ணுது …

திருச்சியில் அடகு நகையை விற்க

குழந்தைங்க படிக்கிற ஸ்கூலுக்கு பக்கத்துல வீடு பார்த்து போயிடலாம்னு முடிவு பண்ணினோம் …
ஒரு, ஒரு மாசம் வீடு தேடினோம்.

போற இடத்துல எல்லாம் ஹவுஸ் ஓனர் நம்ம கிட்ட கேட்கிற கேள்வி பெரும்பாலும், குழந்தைங்க எங்க படிக்கிறாங்க?
சிலர் அவர்களே சாய்ஸ் வெச்சி கேக்குறாங்க… ஏதாவது ரெண்டு இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் பேர சொல்லி…அதுவா இதுவான்னு

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஒரு கட்டத்துல, ஒரு வேளை அரசு பள்ளிங்கிறதுனால வீடு கிடைக்காம போய்டுமோங்குற சந்தேகமும் வந்துருச்சு .
பள்ளிக்கல்வித்துறைக்காக வேலை செய்றதுனால அரசு பள்ளியில சேர்த்தோம்னு சொல்லிரலாமா 🤔ன்னு கூட யோசிச்சோம்.
ஆனா உண்மையில இந்த வேலைக்கு முன்னாடியே அரசு பள்ளியில சேர்த்தாச்சு.

சமூகம் மக்களை எப்படி எல்லாம் ஜட்ஜ் பண்ணுது… அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளது, பெற்றோர்களது பழக்க வழக்கங்கள் குறைத்து மதிப்பிடும்படி இருக்குமா🤔 அல்லது இன்டர்நேஷனல் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அவங்க பெற்றோர் பழக்க வழக்கம் மேம்பட்டதாக இருக்குமா? தெரியலை????

https://www.livyashree.com/

அ.யோகானந்தி
அ.யோகானந்தி

ஆனா ஒன்னு… ஒரு நல்ல வீடு கெடைச்சிருச்சு… பசங்களுக்கு school ரொம்ப பக்கம். ராகேஷ்க்கு studio பக்கம் …

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனா இப்படி ஒரு ஹவுஸ் ஓனர் முதன்முறை பாக்குறேன்…

ஒவ்வொரு முறை போறப்பவும் தண்ணி, டீ, பிஸ்கட் னு கவனிக்கிறாங்க..

திடீர்னு போன் பண்ணி , நாளைக்கு வீடு ஷிப்ட் பண்ணும்போது சமைக்க முடியாது lunch நானே செஞ்சி தரட்டுமான்னு கேக்குறாங்க. பசங்கள பத்தி கவலைப்பட வேண்டாம் நாங்க பாத்துக்குறோம். முக்கியமான விசயம் tenant மாதிரி நடந்துக்க கூடாது, நாம ஒரே family மாதிரி இருக்கணும். சரியா னு கேக்குறாங்க. செவிலியரா (இப்ப ஓய்வு) இருந்த அனுபவம் தான் இந்த கனிவுக்கு காரணமான்னு தெரியல..

குடித்தனம் போன பிறகு எப்படியோ தெரியல, ஆனா இப்ப அந்த ரெண்டு வயதான தம்பதிகள் நல் உள்ளங்கள். மனசுக்கு நிறைவா இருக்கு..

ஆனா இங்க இருக்க பொருட்களை பேக் பண்ணி அங்க போய் திரும்ப அடுக்குறதுக்குள்ள பாதி உயிர் போய்டும்.🥴🥴🥴🤧

 

—  அ.யோகானந்தி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.