தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் ! பட்டியல் வெளியீடு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அவரவர் சொந்த ஊருக்கு சிரமம் ஏதுமின்றி செல்வதற்கு வசதியாக, அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக, அதன் நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “31.10.2024   தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்.,  கும்பகோணம், மூலமாக பொதுமக்கள் எளிதாக  எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் ,  தஞ்சாவூர்,  மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -9-லும்), மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி,  மயிலாடுதுறை, திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், கரூர், மற்றும் திருச்சி செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -5-லும்), அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -8-லும்), புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -3-லும்) ஆகிய  ஊர்களுக்கு  28.10.2024 அன்று 225 கூடுதல் பேருந்துகளும், 29.10.2024 அன்று 730 கூடுதல் பேருந்துகளும், 30.10.2024 அன்று 680 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மேலும்,  திருச்சியிலிருந்து  தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு  28.10.2024 அன்று 100 கூடுதல் பேருந்துகளும், 29.10.2024 & 30.10.2024 ஆகிய நாட்களில் 570 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்து
சிறப்பு பேருந்து

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 31.10.2024, 01.11.2024, 02.11.2024 & 03.11.2024 ஆகிய 4 நாட்களில் கூடுதல்  சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டுவருகிறது.

தடம் 1 – சென்னை – திருச்சி

தடம்  2 – சென்னை – அரியலூர்

தடம்  3 – சென்னை – ஜெயங்கொண்டம்

தடம்  4 – சென்னை – கும்பகோணம்

தடம்  5 –  சென்னை – தஞ்சாவூர்

தடம் 6 – சென்னை – பட்டுக்கோட்டை

தடம்  7 –  சென்னை – புதுக்கோட்டை

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தடம்  8 –  சென்னை – மயிலாடுதுறை

தடம்  9 – சென்னை – காரைக்குடி

தடம் 10 –  சென்னை – கரூர்

தடம்  11 – சென்னை – இராமநாதபுரம்

தடம்  12 – சென்னை – சிவகங்கை

தடம்  13 – சென்னை – வேளாங்கண்ணி

தடம்  14 –  சென்னை – திருவாரூர்

தடம்  15 –  கோயம்புத்தூர் – திருச்சி

தடம்  16 –  திருச்சி – இராமேஸ்வரம்

தடம்  17 –  திருச்சி – கோயம்புத்தூர்

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து  அதற்கேற்ப பேருந்து சேவையை வழங்க ஏதுவாகும்.

எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android /  I  phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை ஒழுங்குப்படுத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ” என்பதாக தெரிவித்திருக்கிறார்.

–   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.