அங்குசம் சேனலில் இணைய

அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம் நிர்வாக இயக்குநர் திரு.இரா.பொன்முடி அவர்கள் (02-05-2025)  தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மற்றும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண் மருத்துவ பரிசோதனை முகாமில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பரிசோதகர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் என 205 நபர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

கண் பரிசோதனை முகாம்பார்வை குறைபாடுகள் (REFRACTIVE ERROR), முதியோர் கண்குறைபாடுகள் (ARMD), கண்புரை பரிசோதனை (CATARACT), குழந்தைகள் கண் குறைபாடு (PEDIATRIC VISION PROBLEMS),  சர்க்கரை கண் நோய் (RETINOPATHY), கண் நீர் அழுத்தம் (GLAUCOMA) போன்ற குறைபாடுகளை கண்டறியும் உபகரணங்களுடன் முகாமில் சிறப்பு பரிசோதனை கட்டணமின்றி வழங்கப்பட்டது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இம்முகாமில் பொது மேலாளர் திரு.என்.முத்துகுமாரசுவாமி, துணை மேலாளர், திரு.P.தங்கபாண்டியன், உதவி பொறியாளர் திரு.G.ராஜ்மோகன், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பரிசோதகர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கண் மருத்துவர்கள் திரு.ஜீவா, திருமதி.அபூர்னா கண் பரிசோதகர்கள் திரு.சிவா, திரு.பூங்குன்றன், திரு.மணிகண்டன், திரு.நவீன், திரு.தனூஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.