அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் – சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம் மற்றும் மண்டலம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கிருத்திகை நாளில் தரிசனம் செய்யும் வகையில்   சிறப்பு சுற்றுலா பேருந்தினை  இன்று (19-10-2024)  திருப்பனந்தாள் அருள்மிகு. அருண ஜடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வளாகத்திலிருந்து மாண்புமிகு.போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் அவர்கள், திருப்பனந்தாள் காசிதிருமடம் ஆதினம் ஶ்ரீலஶ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் ஆகியோர்  தொடங்கி வைத்தார்கள்.

மாநிலங்களவை உறுப்பினர் திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்                      செல்வி.ஆர்.சுதா அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை.சந்திரசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ.இராமலிங்கம் அவர்கள், நிர்வாக இயக்குநர் திரு.இரா.பொன்முடி அவர்கள், பொது மேலாளர்கள் திரு.எஸ்.ஶ்ரீதரன் அவர்கள், திரு.K.சிங்காரவேல் அவர்கள், திரு.S.ராஜா அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பயணிகள் மற்றும் பக்தர்களின்  நீண்ட நாள்  கோரிக்கைகளை ஏற்று மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க இச்சிறப்பு பேருந்து  இன்று (19-10-2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. 5 முறை  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திருவாரூரில் நீண்ட நாட்கள் ஓடாத தேரையும் ஓட்டி சாதனை படைத்தவர்.

தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து தொடர்ந்து அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் மதிக்ககூடிய அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 முருகன் கோவில்களில் செல்லும் வகையில் ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் இச்சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மேலும் இதுபோன்ற சிறப்பு சுற்றுலா பேருந்துகள் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இயக்கப்படும். இவ்வாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  9 நவக்கிரக கோவில்களுக்கும் கும்பகோணத்திலிருந்து சிறப்பு சுற்றுலா பேருந்தினை இயக்க உத்தரவிட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து முருகன் கோவில்களுக்கும் குறைந்த கட்டணமான நபர் ஒன்றுக்கு  ரூ.650/- ஆக நிர்ணயிக்கப்பட்டு ஏழை நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இப்பேருந்து சேவை  இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இது போன்ற பேருந்துகள் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.  இதுபோன்ற அரசின் திட்டங்களை பெறுகின்ற பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு நல்ஆதரவு வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.ஆர்.உஷா புண்ணியமூர்த்தி அவர்கள், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.தேவி ரவிச்சந்திரன் அவர்கள், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.கோ.க.அண்ணாநம்பி அவர்கள், திருப்பனந்தாள் பேரூராட்சித் தலைவர் திருமதி.எஸ்.வனிதா அவர்கள், திருப்பனந்தாள் பேரூராட்சி துணைத்தலைவர் திருமதி.எஸ்.கலைவாணி அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திரு.அய்யாராசு அவர்கள், திருமதி.இளவரசி சின்னசாமி அவர்கள்,  பேரூராட்சி மன்ற உறுப்பினர் திரு.சுரேஷ் அவர்கள்,அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு  அலுவலர்கள், பொதுமக்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிர்வாக இயக்குநர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,

கும்பகோணம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.