அங்குசம் சேனலில் இணைய

தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய திருத்தலம் ! ஆன்மீகப் பயணம்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிரபஞ்சத்தின் வடிவமாகவும் அணுவுக்குள் இயக்கமாகவும் இருப்பவர் பரம்பொருளான சிவபெருமான். அவர் அருவம், அருவுருவம், உருவம் என்று அனைத்து நிலைகளிலும் அருள்புரிந்து படைத்தல், காத்தல், அளித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐவகைத் தொழில்களை மேற்கொண்டு உலக ஜீவராசிகளை மட்டுமல்லாமல் தேவர்களையும் மற்ற தெய்வங்களையும் காத்து அருள் புரிகிறார். கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இதை நாம் ஓரளவு அறிவோம். தெய்வங்கள் வழிபட்ட சிவத்தலங்கள் எண்ணற்றவை இருந்தாலும் சில திருத்தலங்களை இங்கே பார்க்கலாம்.

அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்!

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கயிலையில் ஒருமுறை சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மயில் தன் தோகையை விரித்து அசைந்தாடி வந்தது. உபதேசத்தை கேட்காமல் அதன் அழகில் மயங்கி விட்டாள் அம்பிகை. இதனால் அம்பிகையின் மனநிலையை அறிந்து கொண்ட சிவபெருமான் உபதேசத்தை கேட்காமல் மயிலின் அழகில் மயங்கிய நீ, பூமியில் மயிலாக பிறப்பாய் என்று சபித்து விட்டார். தான் செய்த தவறுக்கு வருந்திய அம்பிகை ஈசனிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் அருளும் படி பிரார்த்தித்தாள். இறைவனும் மனமிறங்கி பூமியில் மயிலாகப் பிறந்து எம்மை வழிபட்டு வா, உரிய காலத்தில் யாம் உமக்கு தரிசனம் தந்து சாப விமோசனம் அளிப்பதாக கூறினார். அதன்படி, அம்பிகை மயில் வடிவம் கொண்டு மயிலாப்பூர் என்னும் தளத்தை அடைந்தாள். அங்கே புன்னை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி வணங்கி சாப விமோசனம் பெற்றாள் அம்பிகை.

கபாலீஸ்வரர்-மயிலாப்பூர்
கபாலீஸ்வரர்-மயிலாப்பூர்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனால் அம்பிகை சாப விமோசனம் பெற்ற தலமே கபாலீஸ்வரர் தலமாகும். அம்பிகை மயில் வடிவம் கொண்டு இறைவனை வணங்கியதால் ‘திருமயிலை’ என்றும் காலம் மருவி ‘மயிலாப்பூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. மயில் வடிவம் எடுத்த அம்பிகை கபாலீஸ்வரர் கோவிலில் இன்றும் கற்பகவல்லி தாயார் என்னும் பெயரில் அருள் புரிகிறார். மேலும், கபாலீஸ்வரர் அருளால் பாம்பு தீண்டிய பூம்பாவையை திருஞானசம்பந்தர் உயிர் பிழைக்க செய்தார். ஆகவே, இத்தலத்தில் வழிபடுவோருக்கு மன நிம்மதி மற்றும் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

திருமால் வழிபட்ட தலம் – வீழிநாதேஸ்வர், திருவீழி மிழலை!

சிவ பெருமானின் நெற்றியின் வியர்வை துளியில் இருந்து ஜலந்தரன் என்ற அசுரன் ஒருவன் தோன்றினான். பிரம்மர், விஷ்ணு, தேவர்கள் போன்ற தெய்வங்களை வெற்றி கொண்ட ஜலந்தரன் சிவபெருமானையும் எதிர்த்து போரிடச் சென்றான். அதனை அறிந்த சிவபெருமான் தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து அதை பெயர்த்து எடுத்து கொண்டு வா, பிறகு தன்னுடன் வந்து போரிடுமாறு கூறினார். ஜலந்தரன் அந்தச் சக்கரத்தை பெயர்த்து எடுத்தான். அதை தன் தலையிலும் வைத்துக் கொண்டான்.

வீழிநாதேஸ்வர்-திருவீழி-மிழலை
வீழிநாதேஸ்வர்-திருவீழி-மிழலை

அதன் விளைவாக தன் அழிவை அவனே தேடிக் கொண்டான். இதனால் அனைத்து உலகங்களையும் அழிக்க வல்ல அந்த சுதர்சன சக்கரத்தை பெற விரும்பிய திருமால் சிவபெருமானை குறித்து தவம் புரிந்தார். மேலும், 1008 தாமரை மலர்களால் பூஜிக்க விரும்பி 1008 தாமரை மலர்களை பறித்து வந்து திருமால், ஆதி சிவபெருமானை பூஜித்தார். அவரை சோதிக்க நினைத்த சிவபெருமான் ஒரு தாமரை மலரை மறைய செய்தார். மனம் தளராத திருமால் தன் கண்களில் ஒரு கண் மலரை பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சிக்க துணிந்தார். திருமாலின் உறுதியான பக்தியை கண்ட சிவன் திருமாலுக்கு அருள் புரிந்ததுடன் சுதர்சன சக்கரத்தையும் வழங்கி அருள் புரிந்தார். திருமால் 1008 மலர்கள் மூலம் சிவனை வணங்கி சக்ராயுதத்தை பெற்ற தலம் தான் திருவீழிமலை. திருமாலுக்கு சுதர்சன சக்கரத்தை வழங்கியதால் இங்கு சிவபெருமான் வீழிநாதேஸ்வரராக அருள் புரிகிறார். இவரை வணங்கினால் கல்யாண வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.

முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம் சேனாதிபதிஸ்வரர்!

அனைத்தையும் படைக்கும் கடவுள் நான், அனைத்தையும் அறிந்தவனும் நான் ஒருவன் மட்டுமே என்று கர்வம் ஏற்பட்டது பிரம்மதேவருக்கு, அவருடைய கர்வத்தை போக்க எண்ணி திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான் அவரிடம் பிரணவ் பொருளை விளக்கும் படி கேட்டார். கர்வத்தின் காரணமாக பிரணவ் பொருள் தெரியாமல் விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்து தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார் முருகர். நடக்கின்ற நிகழ்வினை அறிந்து கொண்ட சிவபெருமான் முருகனிடம் பிரணவ் பொருளின் விளக்கம் கேட்டார். சீடராக இருந்து கேட்டால் மட்டுமே உபதேசிக்கப்படும் என்று முருகப்பெருமான் சிவனிடம் கூறவே, சிவபெருமானும் சீடராக முடிவு செய்து முருகனிடம் உபதேசம் பெற்றார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

 குமரக்கோட்டம் சேனாதிபதிஸ்வரர்
குமரக்கோட்டம் சேனாதிபதிஸ்வரர்

இதனால் குருவுக்கு நிகரான தன் தந்தையையே அதாவது சிவபெருமானையே மண்டியிடச் செய்த தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக காஞ்சி நகரை அடைந்து ஒரு மாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருடைய வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் முருகனின் மணக்குறையை போக்கி அவருக்கு ‘சேனாபதீஸ்வரர்’ என்ற திருப்பெயர் வழங்கினார். அந்த தலம் தான் காஞ்சியில் உள்ள ‘குமரிக்கோட்டம்’ அந்தக் கோயிலில் முருகர் மா மரத்தடியில் ‘மாவடி கந்தன்’ என்ற பெயரில் அருள் புரிகிறார். இவரை வழிபட்டால் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுவது உடன் ஞானத்திற்கும்,சித்திக்கும் வழி வகுக்கும் என்பது ஐதீகம்.

கணபதி வழிபட்ட தலம் – கணபதீஸ்வரர் திருச்செங்காட்டங்குடி!

முற்காலத்தில் மகத நாட்டை ஆண்ட மாகத மன்னன் மற்றும் விபுதை தம்பதிக்கு யானை தலையும், மனித உடலும் கொண்ட மகன் பிறந்தான். அவனுக்கு கஜமுகாசுரன் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிறந்த சிவபக்தனான அவன் சிவனாரை நோக்கி தவம் இருந்து அறிய வரங்களை பெற்றான். எவராலும் அழிக்க முடியாத ஆற்றலும் தேவர்களே குற்றவியல் செய்யும் பாக்கியமும் பெற்ற கஜமுகன் விசித்திர காந்தி என்பவளை மணந்து மதங்கபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினான்.

கணபதீஸ்வரர்-திருச்செங்காட்டங்குடி
கணபதீஸ்வரர்-திருச்செங்காட்டங்குடி

தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானின் அருளால் தோன்றிய ஆனை முக கடவுள் தன் வலது தந்தத்தை உடைத்து அதையே ஆயுதமாக்கி கஜமுகாசுரனை அழிக்க அவன் மீது ஏவி அவனைக் கொன்றார். சிவபக்தனான கஜமுகனை கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தை போக்கிக் கொண்ட தலம் தான் ‘கணபதீச்சுரம்’ என்னும் பெயருடைய திருச்செங்காட்டக்குடி. கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான் கணபதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

சிவனார் சிவனை வழிபடும் தலம் – திருவண்ணாமலை!

நம்முடைய துன்பம் தீருவதற்காக நாம் இறைவனை வணங்குவது இயல்பான ஒன்று. ஆனால், நம் பொருட்டு நம் துன்பங்கள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக இறைவன் தன்னைத் தானே வழிபடும் அற்புத அருளாடலும் இந்த புண்ணிய பூமியில் நடைபெறவே செய்கிறது. அப்படிப்பட்ட, அருளாடல் நிகழும் அந்த தலம் தான் திருவண்ணாமலை திருத்தலம்.

சிவனார் சிவனை வழிபடும் தலம்

சிவனார் சிவனை வழிபடும் தலம்

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சிவபெருமான் அருணாச்சலேஸ்வரரை வழிபடுவதாக ஐதீகம். உலக நன்மை வேண்டி சிவபெருமான் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரராக இருந்து அவரை அவரே வழிபடுகிறார் என்று நம்பப்படுகிறது. மேலும், கிரிவலம் வருவதன் மூலம் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.

 

–  பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.