அங்குசம் சேனலில் இணைய

ஆன்மீகப் பயணம் தொடர் 7: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நம் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு என்னதான் தமிழ்நாட்டில் பல கோவில்கள் இருந்தாலும் அவருக்கென இருக்கும் அறுபடை வீடுகளே தனி சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைக்கும். இந்த அறுபடை வீடுகளுக்கு தனி சிறப்புகளும் வரலாறும் உண்டு, அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் வரலாற்றை பார்ப்போம்.

1.திருப்பரங்குன்றம் – மதுரை மாவட்டம்!

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருப்பரங்குன்றம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க மலையின் அடிவாரத்தில் ஊரின் நடுவே குன்றே கோயிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோவிலாகும். இங்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் முறையாகப் பெற்ற வரலாற்று புகழ்பெற்ற தலமாகும். திருப்பரங்குன்றம் 275 தேவார தலங்களில் ஒன்றாக பெருமை பெற்றுள்ளது. இத்திரு கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் உள்ளது. இத்தலம் திருப்பரங்கிரி பராசல தலம், குமாரபுரி, விட்டனு துருவம், கந்தம்மா தலம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தன் பரங்குன்றம், சுவாமிநாத புறம், முதற்படை வீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

திருப்பரங்குன்றம் - மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் – மதுரை மாவட்டம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மூலவர்: சுப்ரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி அம்மன் தாயார்.

இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

 

2.திருச்செந்தூர் – தூத்துக்குடி மாவட்டம்!

முருகனின் இரண்டாம் படை வீடாக வீடாக திகழ்வது திருச்செந்தூர் ஆகும். இது வங்காள விரிகுடாவை ஒட்டி கடலோரத்தில் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு முருகனின் அருளும் குரு பகவானின் அருளும் கிடைத்து சகல துக்கங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருச்செந்தூரில் பழந்தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் சேயோன் என குறிப்பிடப்படும் முருகப் பெருமான் தவம் செய்த தலமாகவும் கூறப்படுகிறது. முருகப் பெருமானை தரிசிப்பதற்காக குருபகவான் தவம் செய்த தலமும் திருச்செந்தூர் ஆகும். திருச்செந்தூருக்கு சென்று முருகனை வழிபடுபவர்களுக்கு குறைகள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

திருச்செந்தூர் – தூத்துக்குடி

மேலும், சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழிபடுவதால் குழந்தைகள் பேசும் திறனை பெறுவது, வியாதிகள் நீங்குவது, மெய் ஞானத்தை பெறுவது, குரு பகவான் அருளை பெறுவது மேலும், போக மோட்சங்களை தரும் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இங்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் பல நோய்களை நீக்கி ஆன்மீக நன்மைகளை அளிக்கிறது. சங்க இலக்கியங்களில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. முருகன் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து தீலமையில் வடிவிலான சூரபத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம் ஆகும். மேலும், இது முருகன் மயிலை வாகனமாக பெற்ற தலமும் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சூரசம்கார விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 

3.பழனி – திண்டுக்கல் மாவட்டம்!

மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் பழமையானது மற்றும் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலமாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. பழனி பக்திக்கும் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது வரலாறு புராணக் கதைகளாலும் வரலாற்று உண்மைகளாலும் பின்னிப் பிணைந்துள்ளது. இங்கு ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் முருகன். இக்கோவிலில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாசன முருகன் சிலை பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளை போக்கும் அருமருந்தாக உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், இந்து புராணங்களின் படி அகஸ்திய முனிவரின் உத்தரவின் பெயரில் கைலாசத்தில் இருந்து இடும்பன் இந்த மலையை எடுத்து சென்று முருகனின் தற்போதைய இடத்தில் பழனியில் வைக்க செய்யப்பட்டது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பழனி - திண்டுக்கல் மாவட்டம்
பழனி – திண்டுக்கல் மாவட்டம்

பின்னர், நாரதர் கைலாசத்தில் சிவனை சந்தித்து ஞானப்பலம் (அறிவின் பழம்) வழங்கியபோது சிவன் தனது இரண்டு மகன்களில் யார் உலகை மூன்று முறை சுற்றி வருகிறாரோ அவர்களுக்கு அதை வழங்க முடிவு செய்தார். சவாலை ஏற்றுக்கொண்டு தனது மயிலில் முருகன் உலகம் முழுவதும் தனது பயணத்தை தொடர்ந்தார். ஆனால், அவரது சகோதரர் விநாயகர் உலகம் தனது பெற்றோர் ஆகிய சிவனும், பார்வதியும் தவிர வேறு இல்லை எனக் கருதி அவர்களை சுற்றி வந்து பழத்தை பெற்றுக்கொண்டார். அதை அறிந்த முருகன் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததால் கோபமடைந்து பழனி மலையில் ஒரு துறவியாக வாழ தேர்ந்தெடுத்தார். மேலும், இக்கோவிலின் சிறப்பு காவடி தூக்கி வரும் பக்தர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பழனி கோயில் கும்பாபிஷேகம், தைபூசம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

4.சுவாமி மலை – தஞ்சாவூர் மாவட்டம்!

சுவாமி மலை - தஞ்சாவூர் மாவட்டம்
சுவாமி மலை – தஞ்சாவூர் மாவட்டம்

சுவாமி மலை என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து நகரம் மற்றும் கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் முருகன் கோவில்களில் ஒன்றாகும். இந்த சுவாமிமலை நகரம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு சிறிய மலையில் அமைந்துள்ளது. இது முருகனின் நான்காம் படை வீடு ஆகும். இக்கோவிலில் பெயர் காரணம் முருகன் தன் தந்தை சிவ பெருமானுக்கே பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் அவர் இங்கு தகப்பன் சுவாமியாகவும் சுவாமிநாதன் ஆகவும் அருள்கிறார் என்பதால் சுவாமிமலை என்று பெயர் பெற்றது. தகப்பன் சுவாமி குருவாக இருந்து தந்தைக்கு உபதேசம் செய்ததால் இந்தப் பெயர் வந்தது. முருகப்பெருமான் இங்கு சுவாமிநாத சுவாமி ஆகவும் பால முருகனாகவும் அருள் பாலிக்கின்றார்.

 

5.திருத்தணி – திருவள்ளூர் மாவட்டம்!

திருத்தணி மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில். இது முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகும். முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீக்கும் பொருட்டு சூரப் பதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு கோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின், இதற்கு தணிகை என பெயரும் உண்டு.

திருத்தணி - திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி – திருவள்ளூர் மாவட்டம்

மேலும் தேவர்களின் அச்சம் தணிந்த இடம் முனிவர்களின் வெகுளி, மயக்கங்கள் ஆகிய பகைகள் தனியும் இடம் அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றை தணிக்கும் இடம் ஆதலாலும் இதற்கு தணிகை என பெயர் பெற்றது. இத்திருக்கோவில் சோழர் மற்றும் விஜயநகர காலத்தியது. இது திராவிட கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும், முருகனும், வள்ளியும் காதலித்து இறுதியில் திருமணம் செய்து கொண்ட தெய்வீக இடமே இது குன்று தோறாடல் ஆகும்.

 

6.பழமுதிர்ச்சோலை – மதுரை மாவட்டம்!

முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக திகழ்கிறது. இது மதுரையிலிருந்து 15 மையில் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது. சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று அவ்வையை பார்த்து முருகர் கேட்ட இடம். ஆதலால், இது பழமுதிர் ச்சோலை என்று அழைக்கப்படுகிறது.

விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்திருத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். மேலும் சோலைமலை என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும், முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெறுகின்றன.

 

-பா. பத்மாவதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.