அங்குசம் சேனலில் இணைய

அன்று ஆன்மீகம் கூட்டம்… இன்று அரசியல் கூட்டம்…

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அது 1992..

நண்பர்களுடன் நூலகம் செல்வது, சினிமா பார்ப்பது, ஊர் சுற்றுவது என கொஞ்சம் கால் முளைத்த காலம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

12 வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடப்படும், மகாமகம் திருவிழா வந்தது.  எங்கள் தஞ்சையில் இருந்து நாற்பதே கி.மீ.யில் இருக்கும் கும்பகோணத்தின் பெருவிழா.  மாநிலம் முழுவதிலும் இருந்து மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள்.  அப்போதே லட்சக்கணக்கானோர் ஒரே நாளில் கும்பகோணத்தில் குவிந்துவிடுவார்கள்.  முக்கியமாக, குறிப்பிட்ட நேரத்தில்.. நட்சத்திரப்படி..  தலை முழுகினால் புண்ணியம் என்பது நம்பிக்கை.

எங்கள்  நண்பர்களைப் பொறுத்தவரை, ஒரு திருவிழா நடக்கிறது போயிட்டு வருவோம் என்று திட்டமிட்டோம். நான், தியாகு, ஒயிட் செந்தில், பெங்களூரு செந்தில், ஸ்ரீதர், நடராஜன் அனைவரும் செல்வதாகத் திட்டம். இது போன்ற திட்டங்களை வகுப்பவன் நான்தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சில நாட்களுக்கு முன்பாகவே நான், “பஸ்ல போனா ரொம்ப முன்னாடியே இறக்கிவிட்டுருவாங்க..  அதனால ரயில்ல போயிரலாம்” என்றேன்.

அதுவே அனைவரின் முடிவாக ஆனது.

குறிப்பிட்ட நாளில் ஏற்கெனவே திட்டமிட்டதைப் போல, கொண்டிராஜபாளையத்தில் இருந்த ஸ்ரீதர் வீட்டுக்கு அனைவரும் வந்துவிட்டோம்.

மாடியில் அவன் வீடு.

ஸ்ரீதர் கிளம்பினான். அங்கு அனைவரும் அமர்ந்தோம்.  அங்கே கேரம் போர்டு இருப்பதைப் பார்த்தேன். நான் ஒரு கேரம் பிரியன். நண்பர்களும் அப்படியே.

நான், “டேய்.. ஒரு ஆட்டம் போட்டுப் போவோமா” என்றேன். சிலர், சரி என்றனர். சிலர், நேரமாகிவிடும் கிளம்பலாம் என்றனர்.

சிறு வாக்கு வாதத்துக்குப் பிறகு, கேரம் இரு ஆட்டங்கள் மட்டும் விளையாடிவிட்டு கிளம்பலாம் என திட்டமிட்டோம்.  காரணம்,  எப்போது வேண்டுமானாலும் செல்லும் வகையில் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் விடப்பட்டு இருந்தன.

கேரம் விளையாட ஆரம்பித்தோம்….

இரு ஆட்டங்கள் முடிய… அதே தீவிரத்தில் அடுத்தடுத்த ஆட்டங்கள் தொடர…

இடையில் ஸ்ரீதரின் அம்மா அனைவருக்கும் காபி கொடுத்தார். கொஞ்ச நேரம் கழித்து சாத்துக்குடி ஜூஸ் கொடுத்தார்.

அப்போதுதான் பார்த்தோம்… மணி பகல் 12.

கிளம்பலாம் என்று நினைக்க.. ஸ்ரீதரின் அம்மா, “மணி ஆச்சு… எல்லாரும் சாப்பிட்டு கிளம்புங்க” என்றார்.

ஆகவே கேரம் தொடர்ந்தது…  நால்வர் விளையாட.. மீதமுள்ளோர் பார்க்க.. அடுத்து பார்த்தவர்கள் விளையாட.. விளையாடியவர்கள் பார்க்க.. ஆளாளுக்கு ஆலோசனைகள் சொல்ல.. ஒரே கூத்தும் கும்மாளமுமாய் நேரம் போனது..

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஒரு கட்டத்தில் ஸ்ரீதரின் அம்மா, “எத்தனை தடவைதான் கூப்பிடுறது ஒருத்தனும் காதலயே வாங்க மாட்டேங்கிறீங்க” என சத்தம் போட்டார்.

மணி பார்த்தால் இரண்டு.  அப்போதுதான் பசியே தெரிய  ஆரம்பித்தது.

அருமையான சாப்பாடு. முடித்ததும் கொஞ்சம் கிறக்கமாக இருந்தது. ஒரு பிடி பிடித்தாகிவிட்டது.

சரி, கும்பகோணம் கிளம்பலாம் என்று பேசிக்கொண்டோம்.

அப்போததான் பதட்டமாய் வந்த பக்கத்து வீட்டு அண்ணன், “மகாமக குளத்தில நெரிசல்ல சிக்கி பல பேரு  செத்துட்டாங்க..” என்றார்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சோகம் அது.

பல உயிர்களைப் பறித்த புனித நீராடல்! மகாமக கோர சம்பத்தின் பின்னணி..அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும், தோழி சசிகலாவும் மகாமகத்தில் ஜோடியாக நீராடினர்.  அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு,  மக்கள் ஒதுக்கப்பட்டார்கள்… தவிர ஜெ,, சசி இருவரை பார்க்கும் ஆர்வத்திலும் மக்கள் ஒரு பக்கமாய் குவிந்தனர்.. குளிக்கும் இடத்தை ஜெ., சசி இருவரும் மாற்றியதாகவும் அதனால் காவல் துறையினர் குழம்பி மக்கள் செல்லும் திசையை மாற்ற அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது என்றும் ஒரு தகவல் வந்தது.

மொத்தம் 48 பேர் பலியானதாக அரசு அறிவித்தது. ஆனால் உண்மையில் நூறு பேருக்கு மேல் இருக்கும் என்றார்கள் பலரும்.

மக்கள் மனதில் கொதிநிலை எகிறியது.

கும்பகோணம் எம்.எல்.ஏ.வாக இருந்த ராமநாதன், “மகாமகமான இன்று மிக நல்ல நாள். இன்று மரணடைந்தவர்கள் நேராக சொர்க்கத்துக்குப் போவார்கள்” என்றார். அது கொதிப்பை அதிகப்படுத்தியது.

குறிப்பிட்ட  (நட்சத்திர) நேரத்தில் மகாமக குளத்தில் குளிக்க வேண்டும் என்பதுதான் சாஸ்திரமாம்.  இந்த கொடும் நிகழ்வுக்குப் பிறகு,  “குறிப்பிட்ட நேரத்தில்  என்று இல்லை.. அந்த நாள் முழுக்க குளித்தாலும் புண்ணியம் உண்டு” என்றார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

இப்போதும் அந்த நண்பர்களுடன் பேசினால், அந்த மகாமக நிகழ்வு பற்றியும், எங்களைத் தடுத்தாற்கொண்ட கேரம், ஸ்ரீதரின் தாயார் ஆகியோர் பற்றியும் நினைவுகூராமல் இருக்க மாட்டோம்.

பின்குறிப்பு: “இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்” என்கிறார்கள்.

கரூரில் 40 பேர் பலியானார்கள். கும்பகோணம் மகாமக கொடூரத்தில் 48 பேர் மரணமடைந்தாக அரசு தெரிவித்தது. ஆனால் நிஜத்தில் நூறு பேருக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகின.

அது ஆன்மிக நிகழ்வாக இருந்தாலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று கட் அவுட், பேனர்கள் வைத்து, கட்சி விழாவாகவே கடைபிடிக்கப்பட்டது. மகாமகத்துக்கு இரு நாட்களுக்கு முன்பாகவே,  காவல்துறையினரின் கெடுபிடி அதிகமானது.

ஆக.. அரசியல் ரீதியாக நடந்த பெரிய பலி என்றால் முதலிடம் குடந்தை மகாமகத்துக்குத்தான்.  அடுத்து கரூர்.  இனியாவது இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அவற்ரைச் செய்ய வேண்டும்..

 

—  டி.வி.சோமு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.