மாங்கனித் திருவிழா மற்றும் ஆன்மீக ஆய்வரங்கம் !
புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பில் மாங்கனித் திருவிழா மற்றும் ஆன்மீக ஆய்வரங்கம், கடந்த ஜூலை 15 அன்று காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் செயலாளர் என்.ஜி.ஆர். அஜாய்குமார் வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்வுக்கு கூட்டமைப்பின் தலைவர் என்.ஜி.ஆர். இளங்கோவன் தலைமை வகித்தார்.

கூட்டமைப்பின் நாகை தலைவர் என்.டி. கண்ணன் ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் தேசிய ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செம்மல் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் ஆய்வரங்கத்தை தலைமை தாங்கி வழிநடத்தினார். பண்முகப்பார்வையில் காரைக்கால் அம்மையார் என்ற தலைப்பில், திருமதி வையந்திரசன், கவிஞர் டாக்டர் செம்பியூரான், அசோக்குமார், வினோத்குமார், ஜி.விஜயலெட்சுமி, சௌபர்னிகா சரவணன், சுரேஷ் ஆகியோர் ஆய்வுரைகளை வழங்கினர்.
நிகழ்வுகளை க.பார்த்திபன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சாவூர் மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் ஆர்.பாஸ்கர், அமைப்பாளர் அய்யனாபுரம் க.நடராசன் ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக, இள.விஷ்ணுவர்த்தன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
— தஞ்சை க.நடராசன்.