No டிரான்ஸ்பர் – only வசூல் டார்கெட் வைத்த அமைச்சர் !
No டிரான்ஸ்பர் – only வசூல் டார்கெட் வைத்த அமைச்சர் !
தமிழகத்தில் கனிமத் துறைய கையில் வச்சிருக்குற இசையின் அதிபதியானவர் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாராம். சமீபத்தில் தான் கட்சியின் சீனியரிடம் இருந்த இலாகாவை மாற்றி கொடுத்துள்ளார் கட்சியின் முதன்மையானவர். ஆனால், பொறுப்பேற்றவுடன் தனது துறை அதிகாரிகளை வரவழைத்து இன்னும் 1 வருக்ஷம் தான் இருக்கு எலெக்க்ஷனுக்கு மாதம் 15 லட்டுகள் கொடுத்தே தீரவேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்.
இதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி குவாரி முதலாளிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனராம். ஏற்கனவே துறையை கையில் வச்சிருந்த சீனியர் மாதம் 5 லட்டுகள் கொடுத்தால் போதும், அதில், கொஞ்ச லட்டுகளை அதிகாரிகளும் சாப்பிட்டுக்குக் கொள்வதும் உண்டு.
அப்பப்போ டிரான்ஸ்பரும் போடுவாராம். அதுக்கு 30 லட்டு வரை கொடுத்து சமாளிப்பார்களாம். தற்போது இசையின் அதிபதி கொடுத்த 15 லட்டு டார்கெட். பலர் மெடிக்கல் லீவு போட்டுட்டு போகும் அளவுக்கு இருக்கிறதாம்.
-அங்குசம் ஸ்பை டீம்