அங்குசம் சேனலில் இணைய

திருச்சி ஏா்போர்ட் அருகே இலங்கை தமிழா்களுக்காக 526 புதிய வீடுகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இலங்கை தமிழா் அகதிகளுக்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையான முகாம்கள் 1987 –ல் தொடங்கப்பட்டது. திருச்சியில்  உள்ள கொட்டப்பட்டு மற்றும் இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய முகாம்கள் மாநிலத்திலேயே  மிகப்பெரிய முகாம்களாகும்.

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள கொட்டப்பட்டு முகாமில் 470 வீடுகளில் 1,200 இலங்கை அகதிகள் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த வீடுகள் பழுதடைந்து மோசமாக உள்ளதாகவும், புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை வைத்து வந்தனா்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதையடுத்து இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதன் மூலம் வீடுகள் வசிப்பதற்கு பொருத்தமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை தமிழா்களுக்காக புதிய வீடுகள்
இலங்கை தமிழா்களுக்காக புதிய வீடுகள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அதன் அடிப்படையில் அயலக தமிழா் நலன் மறுவாழ்வு ஆணையரகம் கொட்டப்பட்டு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக ரூ.41 கோடி மதிப்பீட்டில் புதிதாக 526 புதிய வீடுகள் கட்டித்தர உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இதையடுத்து திருச்சி ஏா்போர்ட் வயா்லெஸ் சாலையில் இருந்து குலவாய்ப்பட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு துணை-முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதன் தொடா்ச்சியாக ரூ.30 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு அஸ்திவாரம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த வளாகத்திலேயே  ஆரம்ப சுகாதார நிலையம், புறக்காவல் நிலையம், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்  அலுவலகம்  அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த வீடுகள் ஓராண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.