அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான தமிழக அரசின் முன்னெடுப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம்களில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களின் தனிச்சிறப்பான சிக்கல்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கும், அகதி வாழ்க்கை முறையிலிருந்து இயல்பான வாழ்க்கைத்தரத்தில் அவர்கள் வாழ்வதற்குரிய வழிவகைகளை செய்வதற்குமான ஏற்பாடாக, ”இலங்கைத் தமிழர்நலன் காக்கும் ஆலோசனைக்குழு” என்பதாக ஒரு குழுவை நியமித்து அக்குழுவின் வழியே பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, “இலங்கைத் தமிழர்களுக்கான உணவுத் தொழில் முனைவோர் சிறப்புப் பயிற்சி முகாம்” ஒன்றை நவம்பர் 06  – முதல் நவம்பர் -08 வரையில் சென்னை SICCI ஆடிட்டோரியத்தில் நடத்திவருகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தன்படி, தமிழகஅரசு முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தேவையான பயிற்சியை அளிப்பதற்கான செயல்பாடுகள் மறுவாழ்வுத்துறையின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படுகிறது.

டாக்டர்.கலாநிதி வீராசாமி
டாக்டர்.கலாநிதி வீராசாமி

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இப்பணியின் முதல்கட்டமாக முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களில், இலங்கை மக்களின் பாராம்பரிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்வதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு “எல்லோரும் இன்புற்றிருக்க” வேண்டும் என்ற நோக்கத்தில் “ஊரும் உணவும்” உணவுத்திருவிழா இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையில் நடைப்பெற்றது.

அவ்விழாவில் பங்கு கொண்டு, உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள முகாம் மற்றும் வெளிப்பதிவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து உணவுத் தொழில் முனைவோர் கூட்டமைப்பிற்கான இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தின் (Network) மூலம் தமிழக அளவில் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி உணவு வணிகத்தில் மேன்மேலும் வளர்ந்து, ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் கூடிய தற்சார்பு நிலையை எட்டுவதற்கு அவர்களை தயார்படுத்தும் பணியின் அடுத்தகட்டமாக உணவுத் தொழில்முனைவோர் சிறப்புபயிற்சி முகாம் நடைபெறுகிறது.

தமிழக அரசின் வழிகாட்டலுடன் நடைபெறும் இப்பயிற்சி முகாமை UNHCR நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.  SICCI நிறுவனத்தால் பயிற்சி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகான ஒழுங்குகளை OfERR நிறுவனத்தினர்செய்துள்ளனர்.

நவம்பர் 6-ஆம் தேதி இன்று காலை பயிற்சிக்கான துவக்கவிழா நடைபெற்றது.

செல்வி சி.சூரியகுமாரி, செயலாளர், ஈழஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் (OfERR) நிகழ்விற்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர்களையும், பயிற்சியில் பங்கேற்கும் அனைவரையும் வரவேற்று பேசினார். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு திட்டங்களை முன்னெடுக்கும் தமிழக அரசிற்கும், பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சச்சிதானந்தவளன்,  UNHCR, சென்னை, பொறுப்பாளர் பயிற்சி தொடர்பான அறிமுகஉரை வழங்கினார்.

இப்பயிற்சியின் நோக்கம் குறித்தும் இப்பயிற்சியில் பங்கெடுப்பவர்கள் இணையத்தின் மூலம் ஒருங்கிணைந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக உணவுவணிகத் தொழிலில் ஈடுபடுவதற்கு இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  இப்பயிற்சிக்கு ஆதரவு வழங்கும் தமிழக அரசிற்கும் பயிற்சியை வழங்கும் SICCI நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அம்பா பழனியப்பன்,  SICCI நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் அம்பா குழுமத்தின் நிர்வாக இயக்குநர்,

இப்பயிற்சியைப யன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் SICCI  நிறுவனம் முழுஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும்,  தொழில்செய்வதற்கான திறன் வளர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

கிருஸ்ணமூர்த்தி  IOFS அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தமிழக அரசால் பல திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

அத்திட்டங்களை நீங்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியின் மூலம் உங்களது திறன்களை வளர்த்துக்கொண்டு வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென எதிர்பார்கிறோம் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

டாக்டர்.கலாநிதி வீராசாமி அவர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கைத் தமிழர்நலன் காக்கும் ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவர்.

இலங்கைத்தமிழர்களின் நீண்டகால அகதிவாழ்க்கைக்கு தீர்வுகான தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சிகள் குறித்து பேசினார். மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான முயற்சிகள் வாழ்வாதார திட்டங்கள் மற்றும் நிரந்தர வீடமைப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். பயிற்சியை ஒழுங்கு செய்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

வினோத்சாலமோன்,  செயலாளர் SICCI, வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் பயிற்சியை வழங்கும் மணிவண்னண் அவர்களுக்கும், பயற்சிபெறும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இப்பயிற்சியை வழங்கும் SICCI யின்ஆதரவு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் (UNHCR) பங்களிப்பில் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.