அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மும்மூர்த்திகள் அருள்புரியும் ஸ்ரீ தாணுமாலய சுசீந்திரம் கோவில்! ஆன்மீக பயணம்-12

திருச்சியில் அடகு நகையை விற்க

மாவட்டத்தின் பிரம்மாண்டமான கோவில்களில் ஒன்று சுசீந்திரம். ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம். தென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில் நாட்டின் நிர்வாக தலைமையகமாக நெடுங்காலமாக இருந்துள்ளது. இந்து மதத்தில் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுசீந்திரம் கோவில் ஏழு நிலை கோபுரத்தை முகப்பில் கொண்டது. பழையாற்றின் கரையில் ஓங்கி உயர்ந்த அடுக்கு கோபுரத்துடன் தாணுமாலயன் ஆலயம் காட்சி தருகிறது.

ஸ்ரீ தாணுமாலய சுசீந்திரம் கோவில்தாணு- சிவன், மில் -விஷ்ணு, அயன்-பிரம்மா இம்மூவரும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்துள்ள ஒருவரே தாணுமாலயான் என்பது தெளிந்த கருத்து. சத்திரி முனிவருக்கு கற்பில் சிறந்த மனைவியான அனுஷியாவுக்கு ஞானரன்பத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர் என்று புராணம் கூறுகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

Thanumalayar Temple : Thanumalayar Thanumalayar Temple Details | Thanumalayar- Suseendram | Tamilnadu Temple | தாணுமாலையர்சத்திரி முனிவரின் மனைவி அனுஷியா தேவியின் கற்பை சோதிக்க எண்ணி முதியவர் வேடத்தில் ஆசிரமம் வந்த மும்மூர்த்திகளையும் சிறு பிள்ளைகள் ஆக்கி அமுதூட்டியதாகவும் பின்பு, முப்பெரும் தேவியர்கள் விருப்பப்படி அவர்களின் கணவர்களை திரும்ப தந்ததாகவும் வரலாறு உள்ளது. இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாய் தானுமாலயன் என்றும் பெயர் தாங்கி சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டது.

இங்கு, மும்மூர்த்திகளையும் ஒருசேர வணங்குவதற்கு இறைவன் வாய்ப்பு அளித்துள்ள இடம் சுசீந்திரம் கொன்றை மரத்தடி சன்னதியாகும். இப்பெருமை வேறு எந்த திருக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பாகும். மேல் பாகம் விஷ்ணு, நடு பாகம் சிவன், அடிபாகம் பிரம்மா என கருதப்படுகிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் இவ்வாலயத்தின் நந்தி வெள்ளை நிறத்தில் மிகப்பெரியதாக உள்ளது. இந்த நந்தியின் உயரம் 12 அடி அகலம் 6 அடி நீளம் 21 அடி ஆகும். இந்திரன் இங்கு வந்து புனிதமடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் என பெயர் பெற்றது. சுசி என்றால் புனிதம் (சுத்தம்) இந்திரன் சுத்தம் அடைந்த இடம் என்பதால் சுசீந்திரம் என பெயர் வந்தது இன்றும் தாணு மாலயானுக்கு அர்த்த சாமி பூஜை இந்திரன் நடத்துவதாக ஐதீகம் உள்ளது .

மேலும், இத்திருக்கோயிலில் மாலையில் பூஜை செய்தவரை அடுத்த நாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. உள்ளே எதுவும் மாறுதல்கள் கண்டால் அதை பிறரிடம் வெளியிடக் கூடாது என்ற ஐதீகப்படி **அகம் கண்டதை புறம் கூறக்கூடாது** என்ற நியதி கடைபிடிக்கப்படுகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இத்திருக் கோயிலில் திருகோபுரம் ஏழு அடுக்கு கொண்டது. தொலைவில் இருந்தே நம்மை வரவேற்கும் இக்கோபுரம் ஏராளமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்ததும் ராமாயணம், மகாபாரத கதைகளை பச்சிலை சாறுகளை கொண்டு கண்ணை கவரும் வண்ணம் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளதும் காண்பதற்கரியதாகும்.

ஸ்ரீ தாணுமாலய சுசீந்திரம் கோவில்இத்திருக்கோவில் வசந்த உற்சவத்தின் போது நீரால் சூழப்பட்ட இம்மேடையில் சுசீந்திரம் பெருமாள் உமையாளுடன் கொலு வீற்றீருப்பார். மண்டபத்தில் மேல் பனிரெண்டு ராசிகளும், நவகிரகங்களும் அமைந்திருப்பது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பு. வசந்த மண்டபத்தின் பின்புறம் நீலகண்ட விநாயகர் தனது மனைவியுடன் அமர்ந்திருக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட வெள்ளி கவசத்தில் ஆஞ்சநேயர்.. சுசீந்திரம் 🙏 🕉இவ்வாலயத்தில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை வழிபாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிரகாரமும் பிரகாரத்தின் இருபுறமும் உள்ள தூண்களில் விளக்கேற்றிய பாவை சிலைகளும், யாழிகளும் செதுக்கப்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாகும். வடக்கு பிரகாரத்தில் நுணுக்கம் நிறைந்த வேலைப்பாடுகள் கூடிய 24 இசை தூண்களும், தென்புறம் 32 தூண்களும் ஒரே கல்லில் செதுக்கியுள்ளனர். இவற்றை, தட்டினால் சப்த ஸ்வரங்களை கேட்கலாம். கல்லிலே கலை வண்ணம் கண்டதோடு இசை வண்ணத்தையும் நிகழச் செய்தது இத்திருக்கோவிலின் அற்புதத்தையும், சிற்பக்கலை களஞ்சியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

ஸ்ரீ தாணுமாலய சுசீந்திரம் கோவில்அடுத்து குலசேகர மண்டபத்தில் உயிர் ஓவியங்களோ! என்று வியக்கத்தக்க வண்ணம் அமைந்துள்ள இரு சிற்பங்களின் கையில் உள்ள நகங்கள் சூரிய ஒளி படும்போது உயிருள்ள உடலின் நக கண்கள் போன்று தோற்றம் தரும். கால் புறம் முன் பாதத்தில் நரம்புகள் புடைத்து எழுந்துள்ள காட்சி உயிருள்ள உடலின் தோற்றத்தை தருகிறது. இத்திருக்கோயிலில் திருமால் சிவன் இருவருக்கும் கொடி மரங்கள் உண்டு. திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

அடுத்துள்ள செண்பகராமன் மண்டபத்தில் ராமாயண, மகாபாரத காட்சிகள் மற்றும் பெண் விநாயகர் விக்னேஸ்வரியையும் தரிசிக்கலாம். மேற்கு பக்கம் கருவறையில் லிங்க வடிவில் இருக்கும் மும்மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தாணுமாலயான் சுசீந்திரம் திருக்கோயிலில் பெரும் பகுதி சேர, சோழ, பாண்டியர்களால் கட்டப்பட்டது. கொன்றையடி சன்னதி மிகவும் பிரதானமானது. இங்குள்ள கொன்றை மரம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது.

சுசீந்திரம் – கண்டுபிடிக்கப்படாத அதிசயம் – பாலாவின் ஒளிபரப்புமண்டபங்கள் பலவும் நாயக்கர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இத்திருக்கோவில் திராவிட கட்டிட கலைக்கு பெயர் பெற்றது ஆகும். நாகர்கோவில் கன்னியாகுமரி நெடுஞ்சாலை நாதர் கோவிலின் இருந்து கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயான் கோவில் உள்ளது. இவ்விடுமுறையில் சுசீந்திரம் கோவிலுக்கு சென்று மும்மூர்த்திகளையும் ஒரே தெய்வமாக கொண்டு இருக்கும் தாணுமாலயானை தரிசித்து வாருங்களேன்.

 

—      பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.