அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பள்ளம் தோண்டி ஒரு மாசமாச்சு? வேலையை எப்போ சார் முடிப்பீங்க?

திருச்சியில் அடகு நகையை விற்க

ஸ்ரீரங்கம் காந்தி சாலை திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தின் முகப்பு வாசலில் இருந்து சாலையோரமாக புதிதான கான்கிரீட் சாக்கடை வசதி அமைப்பதற்காக ஜேசிபி எந்திர உதவியுடன் சாலையோரமாக மிக நீண்ட தூரத்துக்கு பள்ளம் தோண்டி போடப்பட்டது.
பிரபலமான பிஜி நாயுடு ஸ்வீட் கடையும் பல்லாண்டுகளாக இருந்து வரும் பல்வேறு வியாபாரக் கடைகளும் அங்கே தான் இயங்கி வருகின்றன. சாலையை நீள வாக்கில் மிக நீளமாகத் தோண்டிப் போட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிறது.
சிமெண்ட் கட்டை கான்கிரீட் அமைத்து அதன் வேலையினை எப்போது தான் பூர்த்தி செய்யும் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் என்பது யாருக்கும் தெரியவில்லை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதனால், அந்தப் பகுதி வியாபார கடைகளுக்கு வந்து போகும் வாடிக்கையாளர்களும் அதன் ஓரமாக நடந்து செல்லும் பொது மக்களும் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளும் கடந்த ஒரு மாதமாக மிக கடும் சிரமங்களுக்கு தினசரி ஆளாகி வருகின்றனர்.
குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் மிக அருகிலேயே இந்த நிலை என்றால் இதனைச் சீர்படுத்த வேண்டியும் வேலையினை உடனேத் தொடங்கி விரைவுபடுத்த வேண்டும் என்று யாரிடம் தான் முறையிட வேண்டும்…???

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.