அங்குசம் சேனலில் இணைய

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியை கல்லூரியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் காண்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கல்லூரி கல்வித்துறை அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இலாலி மன்றத்தில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக  செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே‌.ச. வாழ்த்துரையாற்றினார். இணை முதல்வர் முனைவர் த.குமார் முன்னிலை வகித்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நேரலையில் ஒளிபரப்பு
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நேரலையில் ஒளிபரப்பு

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கல்லூரி முதல்வர் தம் உரையில், மாநில அரசு செயல்படுத்திவரும் சாதனைகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. திட்டங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வது மிக அவசியம். தமிழக அரசு தருகிற வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி நீங்கள் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என எடுத்துரைத்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சிறந்த மாணாக்கர்கள், சிறந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயல்பாட்டாளர்களுக்கு பாராட்டு வழங்கல், புதுமையான கல்வித் திட்டங்கள். டிஜிட்டல் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தல், மாணாக்கர்களுக்கான கல்வித் திட்டங்களான நான் முதல்வன், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாட்டுக்குப் பிறகு, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சிமில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையுரை நிகழ்த்த இருக்கிறார்கள்.

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நேரலையில் ஒளிபரப்புமாணவர்கள் தடைமின்றி இந்நிகழ்வைக் காண உதவியாக செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் இலாலி மன்றத்திலும், விடுதி அரங்குகளிலும் தேவையான இணைய வசதி, மின்சார ஆதரவு சாதனங்கள், பெரிய திரை உள்ளிட்ட ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருக்கிறது.

கல்லூரித் துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவியர் ஆகியோர் இந்த நேரடி ஒளிபரப்பைக் கண்டு பயனடைந்து வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.