செயின்ட் ஜோசப் கல்லூரி கணினித் துறையில் சான்றிதழ் வகுப்பு நிறைவு விழா !
செயின்ட் ஜோசப் கல்லூரி கணினித் துறையில் சான்றிதழ் வகுப்பு நிறைவு விழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணினித் துறையின் சார்பாக கோடிங் ஃபார் பிகின்னர்ஸ் (CODING FOR BEGINNERS ) எனும் சான்றிதழ் வகுப்பு கடந்த 4 மாதங்களாக நடத்தப்பட்டது. இந்த வகுப்பிற்கான நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருள்தந்தை ம.ஆரோக்கியசாமி சேவியர் சே.ச அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கத்தில் கணினித்துறைத் தலைவர் அ.சார்லஸ் வரவேற்புரை ஆற்றினார். சான்றிதழ் வகுப்பு பற்றிய முழு விவரங்களையும் கணினித்துறைப் பேராசியரும் சான்றிதழ் வகுப்பின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் அலோசியஸ் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் த. ரவீந்திரன் பங்கேற்று வகுப்பிற்கான நன்மைகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் கணினி துறைத்துறை தலைவர் அ.சார்லஸ், சான்றிதழ் வகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அ.அலோய்சியஸ், மற்றும் முனைவர் க.மஹேஸ்வரன் அவர்களை சான்றிதழ் வகுப்புகளை சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் கல்லூரியில் இது போன்று நடத்த பெரும் சான்றிதழ் வகுப்புகளில் பங்கெடுத்து மாணவர்கள் தங்கள் அறிவினை வளர்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார்
121 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் சான்றிதழ்களை பெற்றனர். சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள் இந்த சான்றிதழ் வகுப்பு மிகவும் பயனுள்ளதாகவும் கணினி அறிவைப் பெருக்கிக் கொள்ள நல்வாய்ப்பாக அமைந்ததாகக் கூறி, துறைத்தலைவர் அ,சார்லஸ் சான்றிதழ் வகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அ.அலோய்சியஸ், மற்றும் முனைவர் க மஹேஸ்வரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் கணினி துறை பேராசியரும் சான்றிதழ் வகுப்பின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் க. மஹேஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.
– முனைவர் க. மஹேஸ்வரன்