சீசரின் மனைவியும் சூமோட்டோ வழக்குகளும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சீசரின் மனைவியும் சூமோட்டோ வழக்குகளும் !

இணையத்தில் படித்ததில் பிடித்தது இந்த பதிவு. எழுதிய ஆசாமியை கண்டு பிடித்து அவரது குலம் கோத்திரம் தெறிந்து பின்னர் வெளியிட வேண்டும் என்பதற்கு அவகாசம் இல்லை என்பது ஒருபுறமிருக்க; அதற்கு அவசியம் இல்லை என்ற அளவுக்கு தெளிவாக இருக்கிறது இந்த பதிவு. புரிய வேண்டியவர்களுக்கு புரியும் படியாக, தெளிய வேண்டியவர்களுக்கும் தைக்கும் படியாக அமைந்திருக்கிறது இந்த பதிவு. இணையத்தில் வாசித்த இந்த பதிவு “உள்ளது உள்ளபடி எந்த உள் நோக்கமும் இல்லாதபடி” இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.

அங்குசம் இதழ்..

சீசரின் மனைவி இந்தியப் பிரஜையாக இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் விருப்பப்படி எதோ ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்கவோ அனுதாபியாக இருக்கவோ உரிமை உண்டு. சில பதவிகளைத் தவிர்த்து, அதில் ஒன்று நீதிபதி பதவி, நீதி வழங்கும் இடத்தில் இருக்கும் ஒருவருக்கு பக்கச் சார்பு இருக்கக்கூடாது என்பது சட்டம் . அதே நீதிபதி வக்கீலாக இருக்கும்போது அது பொருந்தாது, அவர் விரும்பும் அரசியல் கட்சியில் உறுப் பினராகவோ நிர்வாகியாகவோ பணியாற்றியிருக்கலாம் .

ஆனால் நீதிபதி ஆனபிறகு அவர் சந்தேகத்திற்கு இட மளிக்காத வகையில் பணியாற்றிட வேண்டும். அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் கீழமை நீதிமன்றத்தில் விடுதலை என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் Suo Moto வழக்காக எடுத்து நடத்தியது. அந்த வழக்கை Suo Moto ஆக எடுத்தவர் நீதியரசர் ஜி.ஜெயச்சந்திரன். அது தான் இப்போது பலரின் சந்தேகத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏனென்றால், நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த அதிமுக ஆட்சியில் சட்ட துறை செயலராக பணியாற்றியவர். அந்த காலகட்டத்தில் இந்த வழக்கின் கோப்புகளை கையாண்டவர். அதாவது அதிமுக சார்பில் கையாண்டிருக்கிறார். மனுதாரரின் எதிர்த்தரப்பில் பணியாற்றியிருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இப்போது அவரே நீதிபதியாக இதே வழக்கில் தீர்ப்பு சொல்வதென்பது எந்தளவிற்கு நியாயத்தின் அருகில் இருக்கும் என்பதே கேள்வி. அதற்கு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதாவது இவ்வழக்கு அமைச்சர் பொன்முடியின் வருவாய் சம்பந்தப்பட்டது என்பதை விட அவர் மனைவியின் சொத்துக்கள் மற்றும் அவர் நடத்திய கம்பெனிகளின் வருவாய் சம்பந்தப்பட்டது. அந்நிறுவனங்களின் வருமான வரிகளை வருடா வருடம் ஒழுங்காக செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அது அமைச்சரின் பணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இத்தீர்ப்பு அமைந்துள்ளது. அமைச்சர் பொன்முடியின் மற்றொரு சொத்துக் குவிப்பு வழக்கில் சில ஆதாரங்கள் கூறப்பட்டிருந்தது.

அதாவது பொன்முடியின் மனைவி திருமதி. விசாலாட்சியின் தாய்வழிச் சொத்துக்களின் விபரம், 100 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள், அவர் நடத்திய நிறுவனங்களில் அவரின் சகோதரர்கள் முதலீடு செய்த பணம் போன்ற தெளிவான அந்த ஆதாரங்களை நீதிமன்றம் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல் திருமதி.விசாலாட்சி தன் தொழிலில் வருடம் 5 கோடிக்கும் மேல் வெற்றிகரமாக பண பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார் என சாட்சியங்கள் அளித்த வங்கி மேலாளர்கள். வருவாய்த்துறை அதிகாரிகளின் சாட்சியங்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

அந்நிறுவனங்களின் வருமானவரியை தாமதமாக கட்டிய காரணத்தை ஆதாரமாக வைத்தே அமைச்சருக்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரி “இருவரின் வருவாய்க்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை” என நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆகையால் தான் இந்த வழக்கின் போக்கு ஒருபக்க சார்பாக நடந்தது போல காட்சியளிக்கிறது என்று தெரிவிக்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்ட த்துறை செயலாளராக இருந்ததன் காரணமாகவே இந்த சந்தேகம் எழுகிறது. அதை சட்ட மொழியில் latent bias எனக் கூறுவார்கள். இந்த ஒரு வழக்கில் மட்டுமல்லாமல் நீதிபதி திரு. ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பளித்த இன்னும் சில வழக்குகளில் இதுபோன்ற சந்தேக நிழல்கள் படிந் துள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர் சட்ட வல்லுனர்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதே போன்ற வழக்கில் சிக்கிய அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ திரு. பரமசிவம் அவர்களின் மனைவி நல்லம்மாளுக்கு ஒரு ஆண்டு சிறை என தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஏன் திமுக அமைச்சர் பொன்முடியின் மனைவிக்கு மூன்று ஆண்டுகள் விதித்தார் என் கேள்வி எழுப்பும் அவர்கள் women harrasment வழக்கில் கைது செய்யப்பட்ட ஏபிவிபியின் முன்னாள் மாநில தலைவரான டாக்டர் சுப்பையா வழக்கை இதே நீதிபதி அவசர வழக்காக எடுத்து அன்றே சாதாரண ஜாமீன் வழங்கியதையும் குறிப்பிடுகின்றனர். மிகவலுவான சட்ட வல்லுனர்களை கொண்ட திமுக கட்சியின் சார்பு வக்கீல்கள் எத்தனையோ பேர் நீதிபதிகள் ஆகியிருக்கின்றனர். ஆனால் இதுவரை இந்த மாதிரியான latent bias சர்ச்சையில் யாரும் சிக்கிக் கொண்டதில்லை.

நீதியரசர் எம். தண்டபாணி
நீதியரசர் எம். தண்டபாணி

ஓ.எஸ்.மணியன் தீர்ப்பையையை கூட உதாரணமாய் கொள்ளலாம். 2021ல் வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் பெற்ற வெற்றி செல்லாது என்று திமுக வேட்பாளர் வேதரத்தினம் தொடர்ந்த வழக்கில் இன்று ஓ.எஸ். மணியனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு வழங்கியவர் நீதியரசர் எம். தண்டபாணி அவர்கள். அவர் திமுக அனுதாபியாக அறியப்பட்டவர். ஆனால் அரசு வக்கீலாக பணியாற்றிய போதே திமுக கட் சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தி விட்டார். நீதிபதியாக பதவியேற்றபின்பு அதன் மாண்பைக் காப்பாற்றும் வகையில் செயலாற்றினார்.

நீதிபதிகள்
நீதிபதிகள்

ஆனால் திமுகவைத் தவிர பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் அந்த மாண்பை நாம் காணமுடிவதில்லை. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன், அனிதா சுமந்த் போன்றோர் வெளிப்படையாகவே ஏபிவிபி மற்றும் ஆர். எஸ்.எஸ் கூட்டங்களில் பங்கேற்பது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, தான் சார்ந்த ஜாதிக் கூட்டங்களில் பங்கேற்பதைக் காண முடிகிறது.

அவர்கள் கையிலெடுக்கும் வழக்குகளில் எந்தளவிற்கு நீதிநிலை நாட்டப்படுகிறது என்பதை நாம் எவ்வாறு கண்டுணர முடியும்? உதாரணத்திற்கு வலதுசாரி சிந்தனை கொண்ட, தான் சா ர்ந்த ஜாதியான பிராமணக் கூட்டங்களில் பங்கு கொள்ளும் நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் அமைச்சர் உதயநிதி அவர்கள் பேசிய சனாதன ஒழிப்பு சம்பந்தமான வழக்கின் தீர்ப்பை வழங்க இருப்பவர்.

வெளிப்படையாகவே சனாதன ஆதரவுக் கூட்டங்களில் பங்கேற்கும் இவர் எவ்வாறு நடுநிலையான நீதியை வழங்குவார் என்னும் சந்தேகம் எழுவது இயல்பே. பொதுமக்களின் ஒரே நம்பிக்கையான நீதிமன்றங்களில் நீதி வழங்கும் நீதிபதிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அந்த பொது மக்கள் எதிர்பார்ப்பது தவறில்லைதானே.

அங்குசம் இணைய குழு

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.