அங்குசம் சேனலில் இணைய

ஒன்றிய அரசு தரமறுத்த ரூ.2,152 கோடி ! ஆஜராகாத அரசு வழக்கறிஞர்! உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்‌ஷா) திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

“தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் பிஎம் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய மத்திய அரசின் பங்களிப்பு தொகையான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசை அணுகியபோது பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தினால் மட்டுமே இந்த நிதியை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ் நிதியை பெறுவதற்கான தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு தடுத்து நிறுத்துவது என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமின்றி அவமதிப்பதாகும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த இந்த வழக்கு  (12.08.2025) உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால் கோபம் அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதி, “மாநிலத்தின் நிதி சார்ந்த முக்கிய வழக்கில் மத்தி அரசின் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி இருக்க வேண்டும். 28 நாள்களுக்குள் உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகி மத்திய அரசு வழக்கறிஞர் தன் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு வழக்கறிஞர் தொடர்ந்து ஆஜராகவில்லை என்றால் சம்மன் அனுப்பப்படும். இல்லையென்றால் தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என்று ஒன்றிய அரசுக்கு நீதிபதி கடுமையான எச்சரிக்கையை விடுத்து வழக்கை ஒத்திவைத்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நிலுவையில் உள்ள ரூ.2,291 கோடி கல்வி நிதி; உச்ச நீதிமன்றம் சென்ற தமிழ்நாடு அரசு!மாநிலத்தின் கல்வி சார்ந்த நிதி தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசின் சார்பில் வாதாட வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்துகின்றது என்ற வாதத்திற்கு வலுசேர்ப்பதாகவே இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

  —    ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.