கட்டுப்பாடோடு பணியாற்றினால் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் ! எம் பி கனிமொழி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு தென் மண்டல ஆய்வு கூட்டம் திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மண்டபத்தில் (07/12/2024) அன்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக்கூடிய அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அதுவும் சுயமரியாதையோடு கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் கல்வி, சமூக மதிப்பு, வேலை வாய்ப்பு  அனைத்தும் உருவாக்கப்பட வேண்டும்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

அதே போல், முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு தந்தவர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதேபோல், ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு  அம்பேத்கர் பெயரில் திட்டத்தை உருவாக்கி தொழில் முனைவராக மாற்றுவதற்குத் திட்டத்தை தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற கனிமொழி கருணாநிதி அவர்கள் கட்டுப்பாடோடு பணியாற்றினால் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

இக்கூட்டத்திற்கு, ஆதி திராவிடர் நலக்குழு மாநில செயலாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

— மணிபாரதி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.