தமிழக அரசு திட்டங்களின் நிதி… மத்திய அரசு நிதியா?..தமிழக அரசு நிதியா? டாக்டர்  பா.சரவணன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடி 20 லட்சம் பயனாளிகள் பயன் அடைந்தவர்கள் என்று உண்மைக்கு புறம்பாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நான்காண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 75,694 கோடிக்கு செய்தபணிகளுக்கு அமைச்சர் வெள்ளை அறிக்கை விடுவாரா?…

தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்று நோய்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கையை ஸ்டாலின் மறைத்துள்ளார்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

தற்போது நிதிநிலை அறிக்கையில் கோமாநிலையில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறைக்கு 21,906 கோடி ஒதுக்கினாலும் எந்த பலனும் இல்லை என கழக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர்  சரவணன் குற்றச்சாட்டு….

கழக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர்  பா.சரவணன் கூறியது…..

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தற்போது நிதி அமைச்சர் 50 மேற்பட்ட துறைகள் குறித்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார், குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறையில் எந்த ஏற்றமும் இல்லை. அதில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் 2 கோடி 20 லட்சம் மக்களின் இல்லத்திற்கு சென்று உயர் ரத்த அழுத்தம் நோய் , நீரிழிவு நோய் சோதனை போன்ற பல்வேறு சேவைகளை  செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது மிகவும் உண்மைக்கு மாறான தகவல் ஆகும் ஏனென்றால்  மருத்துவ திட்டத்தில் பணியாளர்கள் கடுமையாக பற்றாக்குறை உள்ளது. மேலும் ஒருவருக்கு சோதனை செய்தால் அதை மூன்று பேருக்கு செய்ததாக கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

கழக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர்  பா.சரவணன்
கழக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர்  பா.சரவணன்

இந்த திட்டம் முழுக்க முழுக்க தோல்வியை தான் தழுவி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, டில்லி மாநிலங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 2018 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 16 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்தது தற்போது ஒரு லட்சம் பேருக்கு 58  நபர்கள் என உயர்ந்து விட்டது. மேலும், கர்ப்பபை, வாய் புற்றுநோய்,  நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்டவை வருகிறது. மேலும் ஆண்களுக்கு பல்வேறு புற்றுநோய் வருகிறது. இதற்கெல்லாம் சரியான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.

ஆனால் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினோ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கையை மறைத்து ஏதோ சமூக வலைதளங்களில் பதிவுகளை பார்த்து தான் புற்று நோய்க்கு நிதிஒதுக்கப்பட்டது என்று கூறுகிறார். அதில் கூட நடப்பாண்டில் செயல்படுத்த வெறும் 76 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும் நிதிநிலை அறிக்கையில் கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை உலகத் தரம் வாய்ந்த வகையில் புற்றுநோயை கண்டறியவும் பல்வேறு சேவைகளை செய்திடவும் 800 படுக்கை கொண்ட தன்னாட்சி பெற்ற மையமாக செயல்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் 120 கோடி ஒதுக்கப்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல நவீன நோய் கண்டறியும் முறைகளை கையாண்டு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிய  இடைநிலை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேவையான மருத்துவக் கருவிகள் மற்றும் மனித வளம் ஆகியவற்றை 110 கோடியில் அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறுகிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வருமுன் காப்பது என்பது போல உடனடியாக மருத்துவ கருவிகள், மனித வளம் இருந்தாலும் தான் அந்த நோயின் ஆரம்ப நிலையை நாம் கண்டறிந்து தீர்வு காண முடியும். ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு வழங்க திட்டமிட்டுள்ளது என்று கூறுவது விளம்பரத்துக்கான அறிவிப்புதான் இந்த திட்டம் மக்களுக்கு எதுவும் பயன்படாது. மேலும் நடப்பு ஆண்டில் அனைத்து மகளிருக்கு பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு மூலம் புற்றுநோய், இதய நோய் கண்டறியும் சோதனை மற்றும் ஆலோசனை உள்ளிட்ட வழங்குதல் சேவைகளை தன்னார்வ தொண்டு மூலம் இணைந்து வழங்க 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புற்றுநோய் குறித்து பல்வேறு அறிக்கை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக சில திட்டங்கள் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்றுதான் தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் தமிழக அரசு நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் மத்திய அரசு நிதியா?..தமிழக அரசு நிதியா?.. என்பதை விரிவாக வெளியிட வேண்டும்.

கடந்த நான்காண்டு கால மக்கள் நல்வாழ்வுத்துறை நிதிநிலை அறிக்கையில் 75,699 கோடி ஒதுக்கப்பட்டது ஆனால் எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஒரு முழுமையான வெள்ளை அறிக்கை விட வேண்டும் என மருத்துவ வட்டாரங்கள் கூறுகிறது.

தற்போது கூட 21,906 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு தான் நாடி செல்கிறார்கள். குறிப்பாக இன்றைக்கு 48 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனை நாடிதான் சொல்கிறார்கள். ஏனென்றால் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், மாத்திரைகள் ஏன் மருத்துவர்கள் பயன்படுத்தும் முக கவசங்கள், கையுறை கூட இருப்பதில்லை.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் மருத்துவ சுற்றுலா தளமாக உள்ளது என்று ஸ்டாலின் மக்கள் காதில் பூ சுற்றி பேசினார், இது மிகவும் உண்மைக்கு மாறானது தமிழகம் மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே முதன்மையாக இருந்தது என்றால் அது அம்மா ஆட்சி காலத்தில் தான்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை எடப்பாடியார் கொண்டு வந்தார். குறிப்பாக புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகிய காலங்களில் தமிழகத்தில் 23 மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மதுரையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் இரண்டு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளை கொண்டு வருவோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது ஒரு மருத்துவக் கல்லூரியை கூட கொண்டு வர முடியவில்லை.

கடந்த அம்மா ஆட்சி காலத்தில் 32,000 அரசு மருத்துவ காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் தற்பொழுது அரசு மருத்துவமனைகளில கடுமையாக மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல  நடப்பாண்டில் மத்திய அரசு பத்தாயிரம் மருத்துவ இடங்களை அறிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு இதுவரை எத்தனை இடங்கள் பெற்றுள்ளது என்று கூறவில்லை. மேலும் நிதி நிலைஅறிக்கையில் நீட் தேர்வு ரத்து சம்பந்தமாக எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை. அது மட்டும் அல்ல இன்றைக்கு மக்கள் நல்வாழ்வு துறையே ஒரு கோமா நிலையில் உள்ளது  ஆகவே மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர்ந்தால் தான் மக்கள் நல்வாழ் துறையே ஆரோக்கியமாக இருக்கும் என கூறினார்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.