தமிழ்நாடு தேர்தல் களம் – திமுக – அதிமுக- பிஜேபி கூட்டணி கட்சிகளிடையே இவ்வளவு அக்கபோரா ?

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு தேர்தல் களம் – பாஜக – அதிமுக கூட்டணி அமைப்பதில் தீவிரம் – திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்கிறது.  தமிழ்நாடு தேர்தல் களம் ஆரம்பத்தில் குதிரை வேகத்தில் தொடங்கியது. இப்போது கூட்டணிகள் முழுமை அடையாத நிலையில், தேர்தல் களத்தின் வேகத்தில் சற்றுச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அமைக்க வீடு தேடிச் செல்லும் காட்சிகள் இப்போது தேர்தல் களத்தில் அரங்கேறிவருகின்றது.

திமுக கூட்டணி

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

2019, 2021 ஆகிய தேர்தல்களின் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் கூட்டணியில் தொடர்ந்து வருகின்றன. திமுக கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்ட கட்சிகளின் விவரங்கள்

1.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1
2.கொங்கு நாடு மக்கள் கட்சி – 1
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 2
4.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 2

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கூட்டணியில் ஒரு தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ள கட்சிகள்

1.மனிதநேய மக்கள் கட்சி
2.தமிழக வாழ்வுரிமை கட்சி

கூட்டணியில் உடன்பாடு எட்டாமல் பேச்சுவார்த்தையில் உள்ள கட்சிகள்

1.விடுதலைச் சிறுத்தைகள்
2.மறுமலர்ச்சி திமுக
3.காங்கிரஸ்

பாஜக கூட்டணி

பாஜக கூட்டணியில் தற்போது வரை இணைந்துள்ள கட்சிகள். போட்டியிடும் தொகுதி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

1.தமிழ் மாநிலக் காங்கிரஸ்
2.தமிழக முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்)
3.புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்)
4.இந்திய ஜனநாயகக் கட்சி (பச்சமுத்து)
5.அகில இந்தியச் சமத்துவக் கட்சி (சரத்குமார்)

அதிமுக கூட்டணி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதிமுக கூட்டணியில் தற்போது வரை இணைந்துள்ள கட்சிகள். போட்டியிடும் தொகுதி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

1.புரட்சிப் பாரதம்
2.SDPI-இஸ்லாமிய கட்சி
3.தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம்
4.புதிய தமிழகம்

நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு+பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டி என்று அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். தென்காசி, மத்தியச் சென்னை, விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றியும் அறிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்காகப் பாஜகவிடம் பேசிவருகின்றது. அதிமுகவிடமும் பேசி வருகின்றது என்பதை அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் ஒத்துக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டு நன்மை செய்யும் கட்சிகளோடு நாங்கள் கூட்டணி அமைப்போம் என்பதில் மருத்துவர் ஐயா இராமதாசு உறுதியாக இருக்கிறார். நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறோம் என்பதால் இரு கட்சிகளிடமும் கூட்டணி பேசுவதில் தப்பில்லை. நாங்கள் போய்ப் பேசவில்லை. அவர்கள்தான் எங்களை நாடி பேசுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாநில அளவில் 5% வாக்கு வங்கி இருந்தாலும் வட மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் கொங்கு பகுதிகளிலும் 12% வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்ட நிலையில் பாமகவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணியில் மதில் மேல் பூனையாகப் பாமக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பாமக தாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கும் என்பது தெரியவரும்.

ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் கட்சிகள்

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக) கட்சியும் டிடிவி தினகரன் கட்சியும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்று ஓபிஎஸ் அடிக்கடி கூறிவந்த நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பாஜக இன்னும் அழைக்கவில்லை. மேலும் பாஜக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி விழிபிதுங்கி நிற்கிறார்கள். புரட்சித்தாய் சின்னம்மா இந்தத் தேர்தல் விளையாட்டில் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். களத்தில் குதிப்பாரா? என்பது புரட்சிதாய்கே தெரியாது.

மக்கள் நீதி மய்யம்

நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கான பரிந்துரையைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இராகுல்காந்தி செய்துள்ளார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி நிலைப்பாடு இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

இப்படியாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் அவ்வப்போது மேகமூட்டம் ஏற்பட்டு வேகம் குறைந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் தேர்தல் களம் ஜெட் வேகம் எடுக்கத் தொடங்கிவிடும். காத்திருப்போம்.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. Nallamuthu Rengaraj says

    இன்றைய அரசியல் நிலவரம் குறித்து மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் வெளியிட்ட அங்குசம் இதழுக்கு வாழ்த்துக்கள்

Leave A Reply

Your email address will not be published.