அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத்தேர்வில் பங்கேற்பவரா நீங்கள் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற உள்ளது.

இப்பணியினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களில் 10,479 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். அதில் 165 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 35 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள். 35 துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சொல்வதை எழுதுதல் பணிக்கு 35 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் மேற்கொள்ள 7 இயங்கு குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் முதுகலை ஆசிரியர் நிலையில் ஒரு ஆசிரியர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர் இயங்குவர். தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 5 பறக்கும் படை(Flying Squad) மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை(Flying Squad) அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்லிடைப்பேசி, புளுடூத், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துவர அனுமதி இல்லை என்றும், 09.30 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்களை எந்த காரணத்தினை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.