அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சில்லறை இல்லைங்க !  டிஜிட்டலில் போடுங்க ! தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

எல்லோரும் டிஜிட்டல் கரன்சிக்கு மாறிவிட்டாதால், நானும் மாறிட்டேன் என  பிச்சைக்காரர் ஒருவர் க்யூ.ஆர் கோட் மூலம் பிச்சை எடுத்து வருவது வாணியம்பாடியை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததே கையில் பணம் இருக்க கூடாது. வங்கிகளில் மட்டுமே இருக்க வேண்டும் பரிவர்த்தனை டிஜிட்டலில் நடக்க வேண்டும்  என்பதற்காகதான். வேறு வழியின்றி பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கம்மங்கூல் கடை  , பஸ்  , ரயில் டிக்கெட் முதல் , ப்ராண்டடு மால்கள் வரை , Gpay . phone pay,  ippo pay  paytm, என விதவிதமான பணப்பரிவர்த்தனை செயலிகளில் பண பரிமாற்றம் நடத்தி வருகிறார்கள்.

அதற்கு கையில் செல்போன் இருந்தாலே போதும். ஆதார் எண் மற்றும் வங்கிகளில் கொடுத்த செல்போன் எண்ணை இனைத்து டக்கென QR Code-யை ஸ்கேன் செய்து, ஒரே டிக்கில் பணத்தை செட்டில் செய்துவிடலாம் .

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இதனால்,  மக்களிடையே சில்லறை காசுகள்  புழக்கத்தில்  காணாமல் போனதால்  கடுமையாக பாதிக்கப்பட்டது பிச்சைக்காரர்கள் தான்.

வழக்கமாக யாசகம் (பிச்சை) கேட்பவர்கள் நம்மிடம் நெருங்கி வந்து கையை நீட்டினாலே, ‘சில்லற இல்லையென  எஸ்கேப் ஆகிவிடுவோம். இதனால் பிச்சைக்காரர்கள் பாடு ..  படு திண்டாட்டமானது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, மற்றும்  பிரபலமாக விளங்கும் புத்துக்கண் மாரியம்மன் கோவில் பகுதிகளில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருபவர் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்த  செல்வமணி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இவரிடம் தற்போது சில்லறை இல்லைனு  யாராவது சொன்னால், உடனே  தனது கழுத்தில் தொங்கி கொண்டு இருக்கும் வங்கி ‘QR Code போர்டை’ தூக்கிக் காண்பித்து, டிஜிட்டல் பிச்சை கேட்கிறார். அநேகமாக தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் இவராகதான் இருப்பார்.

செல்வமணி
செல்வமணி

தற்போது சோசியல் மீடியாவில் செம்ம பிரபலமாகி வருகிறார். டிஜிட்டல் (செல்வ)மணி என்ற அடையாளத்தோடு, அம்மா தாயே…’ என பிச்சை எடுத்தது எல்லாம் அந்த காலம். எல்லா பரிவர்த்தனைகளையும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாக மேற்கொள்ளும் போது, பிச்சை எடுப்பதையும் செய்ய முடியாதா? என்ற கேள்வி செல்வமணிக்கு வந்ததாகவும் கூறியவர், பிச்சை போடுபவர்கள் முன்வந்தால்  உடனடியாக தனது கழுத்தில் தொங்கும் QR Code போர்டை காட்டி யாசகம் பெறுகிறேன்.  பெரும்பாலானவர்கள்  பர்ஸில் பணம் வைத்துக் கொள்வது என்பதே தற்போது அரிதாக உள்ளது. எனக்கு ஸ்டேட் வங்கி கனரா வங்கி உள்பட 3 வங்கிகளின்  ஏடிஎம் கார்டுகள் இருக்கிறது. அந்த வங்கிகளின் கணக்கை  இந்த ”  பேடிஎம்” செயலி மூலம் இனைத்து  அதற்கான க்யூ ஆர் கோட் வழியாக  பெற்று அதன் மூலம் பிச்சை எடுத்து வருகிறேன். பலரும் 10 ரூபாய் முதல் 50 ருபாய் வரை கணக்கில் செலுத்தி விடுகிறார்கள்.

முன்னாடியெல்லாம் வாணியம்பாடி, திருப்பத்தூர் பஸ்நிலையங்களில்  1 ரூபாய் 5 ருபாய் வரைதான் கொடுப்பார்கள். தற்போது டிஜிட்டலில் ” பத்து ரூபாய் முதல் 50 வரை”  அனுப்பி விடுகிறார்கள்.

வருங்காலத்தில்  என்னைப்போன்ற பிச்சை எடுப்பவர்கள் டிஜிட்டலில் தான் பிச்சை எடுக்க நேரிடும்.  தமிழ்நாட்டிலே நான் முதலாவதாக ( டிஜிட்டலில் பிச்சை எடுப்பவராக ) முந்திக்கொண்டேன்” என்றார் வெடித்த சிரிப்போடு.

செல்வமணி பிச்சை எடுக்கும் இடங்களிலெல்லாம் ஆச்சரியத்தோடு பார்க்கும் இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலாவி விடுவதால், வீடியோ வைரலாகி “தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்”  என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார் என்றும் , மூன்று வங்கி கணக்கு, தலைக்கு 50 வரை வருமானம் என கூறும் அவருக்கு  வீடியோவை பார்த்து விரைவில் ஜிஎஸ்டி கட்ட சொல்லி வருமான வரித்துறையிடமிருந்து ஓலை வந்தாலும் ஆச்சர்யமில்லை என கமெண்டு அடித்தும் வருகின்றார்கள்.

யாகசம் (பிச்சை ) பெறுவது தொழிலாக இருந்தாலும், அதை காலத்திற்கேற்ப “டிஜிட்டல் முறையில்  மாற்றி,  தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரராக உருவெடுத்துள்ள “டிஜிட்டல் (செல்வ)மணி’   என பாராட்டி வருகின்றனர்.

 

—  மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.