தமிழ்நாடு – தேர்தல் களம் 2024 ! காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் – அறிவிப்பு !

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் ? யார் ? கார்த்திக் சிதம்பரம் முதல் முனைவர் தாரகை கத்பர்ட் வரை. மயிலாடுதுறைக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

0

தமிழ்நாடு – தேர்தல் களம் 2024 ! காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் – அறிவிப்பு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரோஸ்மில்
  1. சிவகங்கை – கார்த்திக் சிதம்பரம்
  2. கரூர் – ஜோதிமணி
  3. கன்னியாகுமரி – விஜய் வசந்த்.
  4. விருதுநகர் – மாணிக்கம் தாக்கூர்
  5. கடலூர் – விஷ்ணுபிரசாத்
  6. திருவள்ளூர் – சசிகாந்த்.
  7. கிருஷ்ணகிரி – கோபிநாத்.
  8.  திருநெல்வேலி – ராபர்ட் புரூஸ்
  9. மயிலாடுதுறை – இன்னும் அறிவிக்கப்படவில்லை.
  10. புதுச்சேரி – வைத்தியலிங்கம்
  11. விளவங்கோடு (சட்டமன்றம் ) – முனைவர் தாரகை கத்பர்ட்

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலில் தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ள கார்த்திக், ஜோதிமணி, விஜய வசந்த், மாணிக்கம் தாக்கூர், விஷ்ணுபிரசாத் ஆகிய 5 பேருக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வைத்தியலிங்கம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் புதுச்சேரி மாநில முன்னாள் முதல் அமைச்சராவார்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரி. இவர் நடந்து முடிந்த கர்நாடக, தெலுங்கனா சட்டமன்றத் தேர்தல்களில் வார்ரூம் அமைத்து, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர உதவியவர். கிருஷ்ணகிரியில் போட்டியிடும் கோபிநாத், கிருஷ்ணகிரியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கே ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சாராதவர் என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஷ்ணுபிரசாத் அவர்களுக்குத் தற்போது கடலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி போட்டியிட விருப்ப மனு கொடுத்தும் அவருக்கு வழங்கப்படவில்லை. விஷ்ணுபிரசாத் பாமக தலைவர் சௌமியா அன்புமணியின் உடன் பிறந்த சகோதரர் என்று கூறப்படுகின்றது. முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன்தான் விஷ்ணுபிரசாத். மயிலாடுதுறைக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முனைவர் தாரகை கத்பர்ட் போட்டியிடுகின்றார். இவர் காங்கிரஸ் ஆட்சியில் பெண் அமைச்சராக லூர்து அம்மாள் அவர்களின் கொள்ளுப் பேத்தி. இவர் எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி. படித்தவர். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.

ஆதவன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.