சிறுபான்மையினர் பாதுகாப்போடு வாழும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே – கல்லூரி விழாவில் பீட்டர் அல்போன்ஸ்

0

சிறுபான்மையினர் பாதுகாப்போடு வாழும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே  கல்லூரியில் ஆண்டு விழாவில் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு இக்கல்லூரி, ‘ஜான் போஸ்கோ சலேசிய சபையினரால்’ நடத்தப்படும் ஓர் கல்விக் கூடமாகும்.   எசுப்பானிய பாதிரியார் ஜோசெப் கரீனோ என்பவரால் 1951-ஆம் ஆண்டு நிறுவப்ப மற்றும்ட்ட பழமையான திருப்பத்துார் துாய நெஞ்ச கல்லுாரியின் 73 வது கல்லுாரி ஆண்டுவிழா  10 /2/2024 நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் மரிய அந்தோணிராஜ் தலைமை வகித்தார்.
கல்லுாரி செயலர் பிரவீன் பீட்டர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசு சிறுபாண்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் கடந்த மூன்று நுாற்றாண்டுகளாக தமிழகத்தில் செய்த கல்வி சேவைதான் இன்று சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதற்கான காரணம். இந்த சேவை தொடர்ந்து நடக்க வேண்டும். அதற்கான ஆதரவினை எல்லோரும் தரவேண்டும்.

ரோஸ்மில்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்தில் உள்ள  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்,சமணர்கள், சீக்கியர்கள் போன்ற மத சிறுபான்மையினருடைய வாழ்வியல் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய வாழ்வியல் நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்காகவும், அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஒரு உறவு பாலமாக திகழ்வதுதான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் நோக்கம்.

மறைந்த முதல்வர் கருணாநிதி தான் இந்த ஆணையத்தை வடிவமைத்து இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் தந்து முதல் வகுப்பு ஆணையமாக வகைப்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த ஆணையத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் உண்டு , தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கிறிஸ்தவ,இஸ்லாமிய  இன்னும் மற்ற மத சிறுபான்மையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளார். கல்வி நிறுவனங்களை பொருத்தவரை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற சான்றிதழ் வழங்குவதற்காக இருந்த மிகப்பெரிய நெருக்கடிகளை காலதாமதத்தை எல்லாம் தவிர்த்து இப்பொழுது அதற்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி எல்லாமே ஆன்லைன் மூலம் எளிமை ஆக்கப்பட்டுள்ளது. என்றார்

- Advertisement -

- Advertisement -

4 bismi svs
பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

ஒருமுறை சிறுபான்மையினர் சான்றிதழ் வாங்கி விட்டால் அது ஆயுள் முழுவதும் அந்த சான்றிதழை வைத்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல்வேறு பணிகளை தொடர்ந்து கொள்ளலாம். எனவே இது தவிர சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான ஆசிரியர்கள், பணியிடங்கள், பணி ஓய்வு, பணி மாறுதல் போன்ற பிரச்சனைகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் செய்யப்படாத காரணத்தினால், அவைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக தேங்கி பெரும் நிதி சுமையை கல்வி நிறுவனங்களுக்கும், இப்போது அதை ஏற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கும் சுமத்தக்கூடிய பெரிய நிலை இருக்கிறது. அதை எப்படி தீர்ப்பது என்பது குறித்து முதல்வர் ஆராய்ந்து வருகிறார்.

கடந்த வாரம் கல்வி நிறுவனங்களுடைய தலைவர்களை அழைத்து முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.அது சம்பந்தமாக முதலமைச்சர் ஆவணம் செய்வதாக சொல்லி இருக்கிறார். அதற்கான நல்ல தீர்வுகளை வரும் நிதி நிலை அறிக்கையின் போது முதல்வர் அறிவிக்கலாம்.மேலும் தேவாலய பணியாளர்களுக்காக ஒரு நல வாரியம் அமைத்து தந்திருக்கிறார்.

அதில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள், மற்ற உலாமாக்களைப் போல கிராம பூசாரிகளை போல, அவர்களுக்கும் வாழ்க்கை சம்பந்தமான பல்வேறு நல திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும்.தேவாலயங்கள், மசூதிகளை கட்டுவதற்கு அனுமதி கேட்டு பல்வேறு மாவட்டங்களிலேயே கோப்புகள் நிலுவையில் இருப்பதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து தகுந்த முடிவு அறிவிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார் என்றார்.

-மணிகண்டன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.