விடியல் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா… ?
விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் ஒடிசா பெண் கைது… !
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகில் நாகமங்கலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் என்ற கிராமத்தில் 11 அடுக்குகள் கொண்ட 8 பிளாக்குகளில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’ கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த … தேதியில் விடுதியின் எட்டாம் பிளாக்கில் இருக்கும் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி அங்கு பணிபுரியக்கூடிய பெண்களே விடியல் ரெசிடன்சி முன்பு விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போரட்டத்தை கைவிட்ட பெண்கள் அவரவர்களின் அறைகளுக்கு திரும்பினர். விடுதி சுற்றி பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து ஓசூர் உதவி ஆட்சியர் அக்ரிதிசேத்தி, கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்துவிட்டு இந்த விவகாரம் தொடர்பாக அவர்களின் ஆலோசனை பெயரில் உத்தனப்பள்ளி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாக பெண் பணியாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான ” நீலுகுமாரி குப்தா” பெண்ணை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் எடுக்கப்பட்ட வீடியோவை நீலுகுமாரி தனது காதலன் சந்தோஷ் என்கிற சதீஷ்குமாருக்கு பகிர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

அதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் காதலனை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் , அவன் இருக்கும் பெங்களூருக்கு சென்று தேடி வருகின்றனர்.
இந்த சூழலில் தகவலறிந்த பெண் ஊழியர்களின் பெற்றோர்கள் பலரும் வந்து அழைத்துச் செல்ல முயன்றவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் மறுபுறம் மற்ற அறைகளில் கேமரா ஏதும் பொருத்தப்பட்டுள்ளதா? என பெண் காவலர்கள் 10 குழுக்களாக ஆய்வு மேற்கொண்டதில் வேறு அறைகளில் கேமரா இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அந்த மகளிர் விடுதிக்கு பெண் போலீஸாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறோம். தனிப்படை அமைத்தும், வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்குப் பிறகே தகவல்கள் தெரிவிக்கப்படும் , இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறது. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
தி வேல்முருகன் எம்எல்ஏ கண்டனம்
ஒரு வடமாநில பெண், நூற்றுக்கும் அதிகமான ரகசிய கேமராக்களை அலுவலகத்தின் தங்கும் விடுதியின் கழிவறைகளிலும், குளியல் அறைகளிலும் வைத்து, நமது தமிழ்ப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்துள்ளார். அதைத் தன் காதலன் மூலம் பல வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி, பணமீட்டும் கேவலமான தொழிலை நடத்தியிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த இழிவான குற்றச் செயலைக் குறித்துத் தகவல் அறிந்த ஒரு தமிழ் இளைஞர் தட்டிக் கேட்ட போது, அந்த நிறுவனத்தின் காவலாளிகள் அவரை கொடூரமாக தாக்கி, காயப்படுத்தி இருக்கிறார்கள். இந்தக் கொடூரச் செயல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் காவல்துறை கைது செய்யவில்லை. மேலும், காவல்துறை அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இந்தக் கொடூரமான குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. என கூறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி
பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால் ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும். விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.