அங்குசம் சேனலில் இணைய

சாத்தூர் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் தேரோட்ட திருவிழா உள்ளூர் விடுமுறை அளிக்காததால் அதிருப்தியில் பொதுமக்கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சாத்தூர் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் தேரோட்ட திருவிழா உள்ளூர் விடுமுறை அளிக்காததால் அதிருப்தியில் பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும், ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கு மிக பழமையான கோயிலாகும், இந்த திருத்தளத்தில் ஆனி பிரம்மோற்சவம் ஒட்டி 11 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதில் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டத்தினை ஒட்டி சாத்தூர் மற்றும், வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு நான்கு ரத வீதியிலும், தேரை வடம் பிடித்து வீதி உலா வருவது வழக்கம்,

இதற்காகவருடம் தோறும், அரசு சார்பில் இந்த தேரோட்ட நிகழ்விற்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விடுமுறை விடாததால், பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் தேரோட்ட திருவிழா
ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் தேரோட்ட திருவிழா

இது குறித்த சமூக ஆர்வலர் கூறுகையில்,சாத்தூர் பகுதியில் உள்ள கோயில்களில் மிகப் பழமையான கோயில்களில் இந்த திருத்தலமும் ஒன்று சாத்தூர் அப்பன் ஸ்ரீ பெருமாள் இக்கோயிலில் வருடம் தோறும் நடத்தப்படும், இந்த நிகழ்விற்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளித்து வருங்கால சந்ததியினருக்கு இக்கோயிலின் வரலாறும் பெருமையும் தெரிய வேண்டும் எனவும்.

அவ்வாறு வரலாறு தெரியாமல், இருந்தால் பழங்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்ட பல கோயில்கள் இன்று எங்கு இருக்கிறது என்று கூட தெரியாமல், சிதலமடைந்து, பொதுமக்களுக்கும் இன்று இருக்க கூடிய சந்ததிக்கும் தெரியாமல் இருந்து வருவதாகவும், அந்த வரிசையில் சாத்தூரப்பன் கோயிலும் சென்று விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

ஆகையால் இனி வரும் காலங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இதுபோன்ற சமயம் சார்ந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமிழர்களுடைய வரலாறையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், அறிய அரசு அடுத்த வருடம் நடக்கக்கூடிய இந்த திரு தேரோட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.  அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்துமா அல்லது கடந்து போகுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

– மாரீஸ்வரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.