சாட்டையால் அடித்தால், சிகரெட்டால் சூடு வைத்தால்தான் கொடுமையா ? இதுவும் கொடுமைதான் !
வலிக்குது?? நேற்று நெல்லைல பிரபலமான ஜவுளி கடைக்கு போய் இருந்தேன். தரைத்தளத்தில் எனக்கான துணி எடுத்துட்டு என் கணவர் துணி எடுத்துக் கொண்டிருந்த இரண்டாவது மாடி ஆண்கள் பிரிவுக்கு போனேன்.
அங்கங்க சொற்பமான மக்கள் மட்டும் தான் துணி எடுத்துட்டு இருந்தாங்க. அவர் வரும் வரை வெயிட் பண்ணலாம் அப்படின்னு உட்காருவதற்கு சேர்ரைத் தேடினேன். லிப்டை ஒட்டி நாலு ஐந்து சேர் போட்டு இருந்தாங்க. அதுல ஆட்கள் உர்காந்து இருந்தாங்க. உட்காரதற்கு ஸ்டூல் கேட்டேன்.எங்கேயுமே இல்ல.??
ஒரு சில சொற்ப மக்கள் மட்டும் தான் இருந்தாங்க. மக்களை விட விற்பனை பிரதிநிதிகள் அதிகமா அங்கங்க கையை கட்டிக்கிட்டு நின்னுகிட்டு இருந்தாங்க. 50க்கும் மேற்பட்ட விற்பனை பிரதிநிதிகள் அந்த தளத்தில் இருந்தாங்க.ஆனா ஒரு ஸ்டூல் கூட இல்ல.
ஆட்கள் கூட்டம் இல்லாத நேரம் நீங்க என்ன பண்ணுவீங்க அப்படின்னு கேட்டேன் அங்குள்ள சேல்ஸ் கேர்ள் கிட்ட. காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவங்களுக்குன்னு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று கொண்டு தான் இருப்போம்…?? ஆட்களே இல்லை என்றாலும் நின்று கொண்டு தான் இருக்க வேண்டுமாம்.. என்ன கொடுமை சார் இது அப்படிங்கிற மாதிரி இருந்துச்சு..??!!
ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய மனிதர்களுடைய உடல் வலியை விட ஒரே இடத்துல நிக்கிறவங்கள உடல் வலி ரொம்ப அதிகம்.
காலையில் 9:00 மணிக்கு வேலைக்கு வராங்க..11 மணிக்கு 20 நிமிஷம் டீ பிரேக்.. பிறகு மத்தியானம் ஒரு மணி நேரம் சாப்பாடு பிரேக்.. சாயந்திரம் 4 மணிக்கு 20 நிமிஷம் டீ பிரேக். 14,000 ரூபாய் சம்பளம்.
ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக நிற்கிறார்கள்.. ஒரே இடத்தில்.. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்துல..??!! நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…..
ஏன் உங்களுக்காக நாற்காலி இல்லை என்று கேட்டதற்கு…..இத்தனை பிரதிநிதிகளுக்கும் நாற்காலி போட்டால் இட நெருக்கடி வரும் என்பதற்காக கொடுக்கவில்லை என்கிறார் அந்த பெண்.
பலநூறு மனிதர்களை வைத்துக் கொண்டு ஒரு நிர்வாகம் செய்ய வேண்டும் என்றால் அது நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம்தான்..ஒத்துக் கொள்கிறேன். ஆனால் கண்டிப்புடன் சேர்ந்த கருணை வேண்டாமா??
வலி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தானே. இரண்டு மூன்று மணி நேரம் ஷாப்பிங் செய்யக்கூடிய நமக்கே எங்கடா உட்காரலாம் என்று உடல் தேடுகிறது…. ஒரு நாளைக்கு இப்படி பத்து மணி நேரம் நிற்க கூடிய மனிதர்களின் நிலைமை……
ஒரே ஒரு நாள் நம்ம நின்றால் ஒரு வாரம் நமக்கு உடம்பு வலிக்கும். ஒரு மனிதரை “சாட்டையால் அடித்தாலோ, சிகரெட்டால் சூடு வைத்தாலோ” மட்டும்தான் கொடுமை செய்வதாக அர்த்தமா….??!! இதுவும் கொடுமை தான்..
“முதலாளியால் தொழிலாளர்கள் கிடையாது. தொழிலாளர்களால் தான் முதலாளி..”
எங்கே எந்த ஒரு கடையில் விற்பனை பிரதிநிதிகள் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் நிற்கவைக்கப்பட்டு இருக்கிறார்களோ அது மிகக் கொடிய நடைமுறை கொடுமை…??!!!
ஏன் இதுவரை ஊடகங்களோ மற்றவர்களோ இவர்களுக்கான அடிப்படை உரிமையை கூட கேட்கவில்லை.??
எல்லா மனிதர்களும் இடுப்பு வலிக்க ரத்தமும் சதையுமாக தாய் பெற்றவர்கள் தானே? இவர்கள் மட்டும் என்ன தும்மி அதனால் வெளிவந்தவர்களா??!! வலியும் வேதனையும் அனைவருக்கும் பொது தானே…..

கடைசியாக முதலாளிகளே… பிரபஞ்சத்திற்கும் மொழி உண்டு.. அது உணர்வு என்ற ஒரு மொழி.. உங்களுடைய இடத்தில் உங்களிடம் வேலை பார்க்கக்கூடிய அந்த ஏழை மக்கள் வலியும் வேதனையுமாக தன் வேலையை செய்யும் பொழுது…. எந்தக் கோவிலிலோ எங்கேயும் போய் எந்த புண்ணியம் செய்தாலும் இந்த பாவத்தை கழுவ முடியாது…. தயவு செய்து இந்த மக்களின் வலியை உணருங்கள்…வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் ஒரு சின்ன ஸ்டூல் கொடுங்கள். இப்பொழுதெல்லாம் சிசிடிவி இருக்கிறது வாடிக்கையாளர் இருக்கும் பொழுது சரியாக வேலை செய்யவில்லை என்றால் அப்பொழுது கண்டியுங்கள். எப்பொழுதுமே தண்டிக்காதீர்கள். எல்லாவற்றையும் விட மனிதம் பெரிது.
வாக்கியங்களுக்கு வலிமை அதிகம் !
நெகிழ்ந்து விட்டேன். ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடிய மக்களுடைய வலிகளை பகிர்ந்து இருந்தேன். ஒரே நாளில் 15 லட்சம் பேர் படிச்சிருந்தார்கள். அவர்கள் அந்த கமெண்ட்ஸில் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் ஏன் அந்த நிர்வாகத்திடம் பேசி பார்க்க கூடாது என்று ஒரு எண்ணம். மனதின் ஒரு ஓரத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் பிசினஸ் பண்ண கூடிய நிர்வாகம் நம்மளை மதித்து பேசுவார்களா? இல்லை பிரச்சனை வருமா? இது எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்று ஒரு தயக்கமும் இருந்தது. மீண்டும் அதே கடைக்கு சென்றேன். நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஊழியர்கள் எல்லாரும் அடையாளம் கண்டு கொண்டார்கள். நிறைய ஸ்டூல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி கலந்த இன்பம் எனக்கு. “வார்த்தைகளை விட வாக்கியங்களுக்கு வலிமை அதிகம்” என்று சொல்வதுண்டு அதை கண்கூடாக பார்த்தேன்.
— Amma Shagasraa