அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக எம்எல்ஏக்கு ஆபாச வீடியோ – பணம் கேட்டு மிரட்டும் கும்பல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திமுக எம்எல்ஏக்கு ஆபாச வீடியோ – பணம் கேட்டு மிரட்டும் கும்பல் !

தேனி மாவட்டம் பெரியகுளம்  பாரதிநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுருளிவேல் என்பவரது மகன் 48 வயதான சரவணகுமார். இவர் பெரியகுளம் தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் கடந்த 1.7.23ம் தேதி  அவரது வீட்டில் இருந்த போது அவரது   அவரது whatsapp எண்ணிற்கு  8837039395  என்ற எண்ணில் இருந்து வீடியோ கால் வந்ததாகவும்   அதை சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்  அட்டென்ட் செய்து பேசிய போது  எதிரில் யாரும் பேசவில்லை.

சிறிது நேரம் whatsapp கால்  கட்டாகி விட்டதாகவும்  அன்று 1.12 மணி அளவில்  சட்டமன்ற உறுப்பினர்   சரவணக்குமாரின் வீடியோ காலை ரெக்கார்ட் செய்து அதனுடன் நிர்வாணமாக பெண் ஒருவர் பாலியல் ரீதியாக செயல்களில் இருப்பது போன்று ஒரு வீடியோவை இணைத்தும்  சரவணக்குமாரும் அந்தப் பெண்ணும் பாலியல் ரீதியாக பேசுவது போன்றும் தவறாக சித்தரித்து சரவண குமாருக்கு அனுப்பி வைத்து பணம் கொடுக்கா விட்டால்  வீடியோவை சமூக வலைதளங்களில்  வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால்  அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ சைபர் கிரைம் போலிஸ் ஆலோசனை பெயரில்  சரவணக்குமார் கடந்த  3.7.23ம் தேதி 5000 மற்றும்   8.7.23ம் தேதி ரூபாய் 5000 என பணம் ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சரவணகுமார் MLA
சரவணகுமார் MLA

மேலும் இது குறித்து  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்  தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகாரின் பேரில்  தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார்  10.7.23 தேதி காலை 10 மணி அளவில்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த செய்தி வெளியானதை அடுத்து  பெரியகுளம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரிடம்  வீடியோ காலில் பேசி 10,000 பணத்தை  மோசடி செய்திருப்பது  பெரியகுளம் பகுதியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது .

ஆபாச வீடியோ அனுப்பிய கும்பலின் செல்போன் டவர் மஹாராஸ்டிரா மாநிலத்தை காட்டியிருப்பதால் தேனி சைபர் கிரைம் போலீசார் தற்போது மஹாராஸ்டிராவில் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.