கொட்டப்பட்டு அகதிகளுக்கு புதிய வீடுகள் ரூ.30 கோடி ஒதுக்கியது அரசு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

மிழகத்தில் இலங்கை தமிழா்களுக்காக 107 மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு, ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் மாநிலத்தின் மிகப்பெரிய முகாம்களாக உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள கொட்டப்பட்டில் உள்ள கொட்டப்பட்டில் உள்ள முகாமில் 470 வீடுகள் உள்ளன. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் 37 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழுதடைந்தன. இதனால் அவற்றை சீரமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

பல காரணங்களால் இப்பணி முடங்கிய நிலையில், தங்கள் வசிப்பிடத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அகதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, புனா் வாழிவு மற்றும் புலம்பெயா்ந்த தமிழா் நலன் ஆணையரகம் கொட்டப்பட்டில் உள்ள சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்தது. நிதி ஒதுக்கீட்டிற்காக அதிகாரிகள் காத்திருந்தனா். இந்நிலையில புதிய வீடுகள் கட்ட ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ”கொட்டப்பட்டு முகாமில், வசிக்கும் இலங்கை தமிழா்களுக்கு வேறு ஒரு இடம் அடையாளம் கண்டு, 500 புதிய வீடுகள் கட்ட ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் கட்டும் பணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையிடம் ஒப்படைக்கப்படும். புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை கொட்டப்பட்டு முகாமில் உள்ளவா்களுக்கு எவ்வித தொந்தரவும் இருக்காது என்றனா்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.