கரு கருனு … எத்தனை நாளா தேங்கிக்கிடக்குனே தெரியல … நாறி கிடக்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷன்
கரு கருனு … எத்தனை நாளா தேங்கிக்கிடக்குனே தெரியல … நாறி கிடக்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷன்
திருச்சி ரயில்வே ஜங்ஷன் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, கண்ட அந்த காட்சி முகம் சுழிக்க வைத்துவிட்டது. அந்த வழியே கடந்து செல்பவர்கள் அனைவருமே, முகத்தை பொத்திக் கொண்டும்; என்னமோ நீளம் தாண்டுதல் போட்டிக்கு பயிற்சி எடுப்பவர்களை போலவும் தாவி சென்றுக் கொண்டிருந்தார்கள்.
அட, என்ன இது திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு வந்த சோதனை என்றுதான் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அட, ஆமாங்க. எத்தனை நாள் சாக்கடை தண்ணியோ தெரியல. கருநிறத்துல நாசிய துளைக்கிற நாற்றத்தோட மெயின் ரோட்டுல வழிஞ்சி கிடக்கிது. அதுவும் ரயில்வே ஜங்ஷன் ஆர்ச்-க்கு முன்னாடியே.

ஒரு நாளைக்கு எப்படியும் நூற்றுக்கும் குறைவில்லாத ரயில்கள் வந்து போகிற ஜங்ஷன். திருச்சியின் முக்கியமான அடையாளம். இன்னும் சொல்லப்போனா, அங்கிருந்து கண்ணுக்கெட்டும் தொலைவில்தான் திருச்சி மத்திய பேருந்து நிலையமும் இருக்குது. அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணிகள் குறுக்கும் நெடுக்குமா பயணிக்கிற இடம்.
இப்படி, ஜன நெருக்கடியான திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியான இந்த இடத்திலேயே இந்த அளவுக்கு சீர்கேடா?னு யோசிக்கத்தான் தோணுது. நான் பார்த்தது என்னவோ, நேத்துதான். இது எத்தனை நாளா, இப்படியே இருக்குனு தெரியல. இதுநாள் வரைக்கும் மாநகராட்சி அதிகாரிகளோட கவனத்துக்கு போகாமலா, இருக்கும்?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அன்றாடம் ட்ரெயின் வந்துட்டு போயிட்டு இருக்கிற இடம். இன்னும் சொல்லனும்னா, திருச்சியின் பெருமைகளை சுற்றிப் பார்க்கிறதுக்குனு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ட்ரெயின்லதான் வந்துட்டு போறாங்க. தமிழ்நாட்ட பத்தி, திருச்சிய பத்தி என்ன நினைப்பாங்க? அட, ரயில்வே ஸ்டேஷனே இந்த லட்சணத்துல இருக்குதேனு, வந்த ட்ரெயின்லேயே திரும்பி போக வச்சிடும்போல !
– தமிழி விமலா