திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான்.
Sri Kumaran Mini HAll Trichy
சமுக மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பலம் கொண்ட பெண்ணின் குடும்பம் வழக்கம்போல பெண்ணை பிரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறது.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, ஒரு தலித் இளைஞனின் திருமணத்தை உடைக்க தலித் சமுக ஆதிக்க சக்திகளை அணுக திட்டமிட்டது அந்த குடும்பம்.
வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்
தலித் சமுகத்தை சார்ந்த பெண் காவல் அதிகாரி ஒருவர் மூலம் மற்றொரு தலித் சமுகத்தை சார்ந்த காவல்துறை உயர் அதிகாரியான எடிஜிபி ஜெயராமனை அணுகுகிறார்கள்.
பணமூட்டைகள் கைமாற, தம்பதியினரை பிரிக்கும் பொறுப்பை சிரம்மேல் ஏற்று களத்தில் இறங்கும் எடிஜிபி ஜெயராமன் தலித் விடுதலையே தன் வாழ்வு என தவவாழ்வு வாழும் சட்டமன்ற உறுப்பினர் பூவை மூர்த்தியோடு ஆலோசனை நடத்துகிறார்.
அதன்படி தன் அலுவலக பணிகளுக்கென்று அரசாங்கம் தந்திருக்கும் வாகனங்களில் ஒன்றை எடிஜிபி ஜெயராமன் இந்த உயர்ந்த சேவைக்காக வழங்க, அதில் ஏறிய பூவை மூர்த்தியின் தளபதிகள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப் படுத்தியவாறு புதுமணத் தம்பதிகளை தேடி அலைகின்றனர்..
விஷயம் தெரிந்து தம்பதி தலைமறைவாகிவிட தளபதிகள் தனுஷின் தம்பியை தூக்கிக் கொண்டு போகிறார்கள்..
அடுத்த சில நிமிடங்களில் நடந்த விஷயங்களை தனுஷின் குடும்பத்தினர் அவசர அழைப்பு 100 க்கு அழைத்து பதட்டத்தோடு சொல்ல – ‘கடத்தப்பட்ட இளைஞனுக்கு ஏதேனும் நடந்தால் என்னாகும்?’ ’அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் புதுசாய் வந்திருக்கும் அணில் குஞ்சுகூட நம்மை காறி துப்புமே’ என்று கண் விழித்த காவல்துறை கடமையில் இறங்கியிருக்கிறது.
விசாரணையில் இளைஞனை கடத்திய கார் எடிஜிபியின் வாகனம் என்பது தெரியவரவும் உஷாரானார் எடிஜிபி. சற்றே நேரத்தில் இளைஞனை கடத்திய கும்பல் அவனை விடுத்து விட்டு மறைந்தது.
Flats in Trichy for Sale
எ டி ஜி பியின் வாகனம் கடத்தலுக்கு துணை போனதும் அதில் பூவை மூர்த்தி சம்மந்தப்பட்டிருப்பதும் அதிகார மையத்தை அதிர்ச்சியிலாழ்த்தியது.
அடுத்தடுத்து உத்தரவுகள் பறக்க குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டபின் பூவை மூர்த்தியை விசாரிக்க சென்றனர்.
நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் புடை சூழ காவல்துறையினர் தடுக்கப்பட்டனர். அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு பிரச்சனை பூதாகரமாக தலைமறைவானார் பூவை மூர்த்தி.
இதன் தொடர்ச்சியாக இன்று பூவை சார்பில் முன் பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுக ஆவணங்களை பார்த்து கடுப்பான நீதிபதி எடிஜிபியை கைது செய்ய உத்தரவிட்டதுடன் பூவை மூர்த்திக்கு எம் எல் எ என்றால் என்ன என்று moral science பாடம் எடுத்திருக்கிறார்.
இவ்வளவு நடந்திருக்கிறது.. வழக்கமாக தலித் ஒருவர் பாதிக்கப்பட்டால் வலைத் தளங்கள் முழுக்க துள்ளிக் குதித்து ஓடிவரும் போராளிகள் ஒருவரையும் வலைத் தளங்களில் காண முடியவில்லை..?
ஒரு தலித் இளைஞனின் காதல் திருமணத்தை உடைக்கும் வேலையை ஒரு ஆளும் கட்சி எம் எல் எ வோ அல்லது மாற்று சமுக எம் எல் எ க்களோ செய்திருந்தால் இந்த நேரத்தில் எப்படியெல்லாம் வேஷம்கட்டியிருப்பீர்கள்.?
ஒரு தலித்தை அதிகார பலம் கொண்ட இன்னொரு தலித் கூட்டம் வஞ்சித்தால் கண்டுகொள்ளாமல் போய் விடுவது எத்தகைய மனோபாவம் ?
போராளிகளே இப்போது உங்களை பார்க்கவே ரெம்ப பரிதாபமாக இருக்கிறது!
எளிய ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் அரசியல் அதிகார மையங்களைவிட பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் மௌனம் காக்கும் பொய் போராளிகளான நீங்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான சாபக்கேடு..!
தாமஸ் அருள்செழியன் – மூத்த பத்திரிகையாளர்
தாமஸ் அருள்செழியன்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending