வரதட்சணைக் கொடுமை ! காவலர் மனைவி குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி !
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மல்லிகாபுரம், சின்னத்துரை மகள் அபிநய பிரியா, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக கை குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 அபிநய பிரியா, எனது கணவா் பால்பாண்டிக்கும் இருவீட்டார்கள் முன்னிலையிலும் திருமணம் நடந்தது. திருமணத்தின் பின்னர் ஆண்டிப்பட்டியில் நாங்கள் இருவரும் தனி குடுத்தனமாக வாழ்ந்து வந்தோம். திருமணத்தின் போது 3 மூன்று இலட்சம் மதிப்பிலான சீர்வரிசை மற்றும் 20 பவுன் நகைகள் 2 இலட்சம் பணம் போன்றவை எனது பெற்றோர் கொடுத்துள்ளனர்.
எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக சரியாக குழந்தையையும், என்னையும் பார்க்காத நிலையில் நான் என் கணவரிடம் கேட்ட போது என்னையும், என் குழந்தையும் அடிப்பதும், அசிங்கமாக பேசுவதும், மனபங்கப்படுத்தவதும் செய்து வந்தார்.
நாங்கள் இருந்த உசிலம்பட்டியில் அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் என்னுடைய நாத்தனார் மற்றும் கணவரின் உடன்பிறந்த சகோதரர் மற்றும் அவரின் மனைவி சேர்ந்து என்னை அடித்து, நீ போ உன் வீட்டில் இருந்து நகை 30 பவுன் மற்றும் 5 இலட்சம் பணம் வாங்கி வா என்றும், என் கணவனின் வீட்டில் என்னிடம் வரதட்சணை கேட்டு என்னையும், என் குழந்தையையும் துன்பப்படுத்துவது வழக்கம், என்னுடைய Bank Account-யில் இருந்து 6 இலட்சம் பணம் எடுத்துள்ளார்.

நானும் என் குழந்தையும் 6 மாதங்களாக பெற்றோர்கள் வீட்டில் இருந்தோம். இந்நிலையில் எங்களை துன்பப்படுத்தி அனுப்பிய பின்னர் பெற்றோர்கள் எங்களை சமாதானம் செய்து கடந்த மே மாதம் உசிலம்பட்டியில் சேர்த்து வைத்தனர்.
நானும் என்னுடைய குழந்தையும் என் கணவனுடைய அண்ணன் வீட்டில் வசித்து வந்தோம்.
இதனை தொடர்ந்து எங்களுக்கும், வீட்டிற்கு தேவையான எதையும் வாங்கி தராமல் இருந்த நிலையில் நான் கேட்ட போது என்னுடன் சண்டை போட்டு, எனக்கும் குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிதராமல் இருந்தார். இன்னிலையில் எனக்கு செய்ய வேண்டியவைகளை செய்யாமல் இருப்பதையும் பொறுத்து கொண்டு இருந்தேன்.
என் கணவரின் சகோதர் மற்றும் அவர் மனைவியும் என்னிடம் சண்டை போட்டு இருவரும் சேர்த்து என்னை அடித்தும், அசிங்கப்படுத்தி உன் வீட்டிற்கு போ என்ற என்னை துரத்தினார்கள். இதனை பற்றி என்னுடைய சகோதரர்கள் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
பின்னர் என் கணவர் என்னிடம் நான் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருவதால் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. நீ எங்கு வேண்டுமானால் போ, யாரிடம் வேண்டுமானால் சொல், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் சொல்லுவது தான் எல்லோரும் கேட்பார்கள் . என்னுடைய பணத்தை வைத்து என்னை ஏமாற்றி அவர் பேயரில் சொத்தினை வங்கியுள்ளார். இதை பற்றி என் வீட்டில் யார் கேட்டலும் அவர்களிடமும் சண்டை போடுவது வழக்கம். கடந்த ஒரு வார காலமாகவே என்னுடைய கணவர் வீட்டில் இல்லாத நிலையில் கணவனுடைய சகோதாரர் வீருச்சாமி என்னுடன் தகாத உறவு வைப்பதற்கு சரி என்று சொல் இல்லை எனில் உன்னை உன் கணவரிடம் தேவை இல்லாததை சொல்லி உன்னை வாழ விடமாட்டேன் என்று எனது கணவர் இல்லாத நேரத்தில் சொல்லுகிறார்.
இதனை தொடர்ந்து கடந்த 02.08.2025 அன்று என்னிடம் சண்டை போட்டு நீ உன் அம்மா வீட்டிற்கு போ என்றும், வீட்டை விட்டு துரத்தியும் பஞ்சாயத்துக்கு உன் வீட்டில் வர சொல்லு என்று கூறினார்.
பின்னர் என்னுடைய சகோதரர்கள் அவரிடம் போனில் கேட்டதற்கு உன் அக்காவுடன் வாழ முடியாது என்று கூறியுள்ளார்.
என்னுடைய சகோதரர்களை போனில் நேரில் யாரும் வரக்கூடாது என்றும் மீறி யாரும் வந்தால் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும், உங்கள் மீது பொய்யான புகார் காவல் நிலையத்தில் கொடுப்பேன் என்று என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டுகிறார்.
தற்போது எனது கணவா் பால்பாண்டி தேனியில் உள்ள B1 காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் காவல் நிலையத்தில் இருந்து அடிக்கடி காவலர் பேசுவது போல் உங்கள் மேல் புகார் கொடுத்துள்ளோம் என மிரட்டுகிறார்.
ஆகையால் என் மீது கருணை கொண்டு எங்களிடம் அடவடித்தனம் செய்யும் வரதட்சணை மற்றும் நகை கேட்டும் கொலை மிரட்டல் விடுத்தும் தகாத வார்த்தைகளால் பேசியும் எங்களை துன்புறுத்திய எனது கணவர், நாத்தனார், கணவரின் சகோதரர் மற்றம் சகோதரரின் மனைவி ஆகியோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்