தள்ளாடும் போதையில் போதை ஆசாமிகள் இரண்டு பேர் செய்த காரியம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேவதானப்பட்டி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மது போதையில் இருவர் ஆபாச வார்த்தைகளில் பேசி அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் பயணிகளை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில்,  அதிகாலையிலேயே  பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேருந்து நிலையம் முன்பு  இருவர் மது போதையில்  சாலையோரம்   தூங்கிக் கொண்டு ஆபாசமான வார்த்தைகளில்  ஒருவரையொருவர் அர்ச்சித்துக் கொண்டது, பொதுமக்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேருந்து நிலையம் முன்பு தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம்  ஆக-15 அன்று காலை மது போதையில் செய்வது அறியாது  சாலையோரம் சாய்ந்து கொண்டு  ஆபாசமான வார்த்தைகளில் இருவரும் மாறி மாறி பேசி வருகின்றனர். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பே இன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள்  திறக்க கூடாது என்றும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை கொடுத்து இருந்தும்   தேவதானப்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் இது போன்ற  செயல் தினம் தோறும் தேவதானப்பட்டி பகுதியில் அரங்கேறி வருவதாகவும் இதனை தடுக்க வேண்டிய தேவதானப்பட்டி காவல்துறையினர்  குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டி அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம் என அரசு அலுவலகங்கள் இருந்தும் போதை ஆசாமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது அந்தப் பகுதி வழியை செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பொதுமக்கள் இடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.