12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ! போலீசு கண்டுக்கல… கலெக்டரிடம் முறையிட்ட தாய் !
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, சுந்தர்ராஜபுரம்,லேட் சிலம்பரசன் மனைவி பாண்டியம்மாள், தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டரிடம் அவர் அளித்துள்ளபுகாரில், “ கணவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். என்னுடைய மகள் கடந்த 24.08.2025ஆம் தேதி, எனது மகளை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த டாக்டர்.ஆசைதம்பி என்பவர் பாலியல் தொந்தரவு செய்தனர். அதனை தட்டிக்கேட்ட என்னையும் எனது தாயாரையும் டாக்டரின் மனைவி மற்றும் காசம்மாள் தகாத முறையில் பேசி அடித்தது சம்மந்தமாகவும், கடந்த 25.08.2025 தேதி புகார் கொடுத்தேன்.
ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றஎண்.30/2025, U/s.9(M), 10, Pocso Act, 296(B), 115(2), 351(2), BNS Act, 3(1)(r), 3(1) (s), 3(2) (va) ஆகிய பிரிவுகளின் கீழ் டாக்டர் ஆசைதம்பி, அவரது மனைவி.காசம்மாள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இரண்டு பேரையும் கைது செய்யவில்லை.
மேலும், எனது சகோதரன் மீது டாக்டரின் காரை கண்ணாடியை உடைத்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இதுவரை பதிக்கப்பட்ட நபர்களை விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சினேக ப்ரியாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
— ஜெய்ஸ்ரீராம்
Comments are closed, but trackbacks and pingbacks are open.