இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை … காரணம் டிரம்ப் தான் !
தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் தங்கம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாகவே தங்கத்தின் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான ஏற்றம், இறக்கம் உள்ளிட்டவற்றை பொறுத்து தினமும் தங்கத்தின் விலை என்று மாறிமாறி வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.640 வரை உயர்ந்து ரூ.64,480-க்கு விற்பனையானது. இதன்மூலம் முதல் முதலாக ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது ரூ.64 ஆயிரத்தை கடந்துள்ளது.
ரூ.7,980க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 8,060-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்தை கடந்து இருப்பது இதுதான் முதல் முறையாகும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில் தான் தங்கத்தின் விலை இனி குறையாது. விரைவில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.70,000யை தொடும் தற்போதைய சூழலில் தங்கம் விலை உயர வேண்டிய அளவுக்கு இன்னும் அதிகரிக்கவில்லை. அடுத்ததாக ஒரு சவரன் தங்கம் என்பது ரூ.65,000யை கடந்து மிக விரைவில் இன்னும் அதிகரிக்கும்.

இதற்கு காரணம் என்னவென்றால் அமெரிக்க அதிபரின் அடுத்தடுத்த அறிவிப்புகள்தான். பொருளாதாரம் சீரழியும் நிலையில் உள்ளது. பங்கு சந்தையில் பொருளாதார முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குவார்கள். அவர்களின் தயக்கம் என்பது தங்கத்தின் மீதான முதலீடாக மாறலாம். இதனால் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் இன்னும் உயரும் வாய்ப்புள்ளது. இதனால் மிக விரைவாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70,000யை கடந்து செல்லும் வாய்ப்பு வெகு தூரத்தில் இல்லை” என்கிறார்கள்.
— கலிங்கா இளவழகன்.