அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்! அதிமுகவிடம் இருந்து தொகுதியை கைப்பற்ற முயலும் பாஜக? நேரடியாக போட்டியிடத் தயாராகும் திமுக!

முருகப்பெருமானின் முதற்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் அமைந்துள்ள இந்த சட்டமன்றத் தொகுதி, மதுரை நகரின் முக்கிய வளர்ச்சி மையங்களில் ஒன்றாகும். மதுரை சர்வதேச விமான நிலையம், காமராஜர் பல்கலைக்கழகம், வடபழஞ்சி ஐ.டி. பார்க், நியூட்ரினோ ஆய்வு மையம் ஆகிய முக்கிய நிறுவனங்கள் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன. மேலும், புதிதாக உருவாகும் எய்ம்ஸ் மருத்துவமனையும், தோப்பூர் துணைக்கோள் நகரின் பெரும்பகுதியும் இத்தொகுதியின் எல்லைக்குள் வருகின்றன. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 3,32,001 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 1,63,243 பேர், பெண் வாக்காளர்கள் 1,68,923 பேர், மேலும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 35 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக, சுமார் 45 சதவீதம் வாக்காளர்களைக் கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சௌராஷ்டிரா, நாயுடு, நாடார், பிள்ளை, தலித் மற்றும் இஸ்லாமியர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினரும் அடுத்தடுத்த முக்கிய பங்குடன் இந்தத் தொகுதியில் உள்ளனர்.

https://www.livyashree.com/

இந்தத் தொகுதி பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வென்றுள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்கள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன. அவற்றில், அதிமுக 8 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 2 முறை, மற்றும் தெமுதிக 1 முறை வெற்றி பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றத்தை “சிக்கந்தர் மலை” என அழைக்கும் துணிச்சல் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே திருப்பரங்குன்றம் மலையை மையமாகக் கொண்டு இந்து முன்னணியும் பாஜகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள், மதுரை மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருந்தாலும், அந்தப் பகுதியில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் சில தீவிரமான செயல்கள் நடைபெற்றதால், இம்முறை அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதியை விடவும் திருப்பரங்குன்றம் தொகுதி மீது பாஜக பார்வை திரும்பி இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் எப்படி அயோத்தி தொகுதி பார்க்கப்படுகிறதோ, அதுபோல் திருப்பரங்குன்றம் தொகுதியை தமிழ்நாட்டில் பாஜக பார்க்கிறது. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜன் செல்லப்பா போட்டியிட்டு வென்றவர்.

இந்த சூழ்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியை நோக்கி பாஜகவின் கவனம் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி தொகுதி எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் தொகுதியையும் பாஜக ஒரு அரசியல் அடையாளப் பகுதியாக பார்க்கிறது. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜன் செல்லப்பா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு?

கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜன் செல்லப்பா, திமுக கூட்டணியில் சிபிஐ (எம்) சார்பில் போட்டியிட்ட எஸ்.கே. பொன்னுத்தாயை தோற்கடித்து எளிதாக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அஇஅதிமுக அமைப்புச் செயலாளராகவும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிட தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவரது மகன் ராஜ் சத்யன் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முக்கிய பொறுப்பாளராக பணியாற்றுகிறார்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

2019 இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் சரவணன், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இருந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார். பின்னர் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தால், அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். தற்போது, திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் விருப்பம் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் யாருக்கு வாய்ப்பு?

மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கிருத்திகை தங்கபாண்டியன், வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். கடந்த முறை திமுக நேரடியாக போட்டியிட்டு இருந்திருந்தால், அந்த நேரத்தில் கிருத்திகா தங்கபாண்டியனே வேட்பாளராக இருந்திருப்பார் என்று தொகுதி வட்டாரங்களில் பேசப்படுகிறது.மேலும், இவரின் கணவர் தங்கபாண்டியன், திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

கிருத்திகா தங்கபாண்டியன்
கிருத்திகா தங்கபாண்டியன்

மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் பாலாஜி, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதற்காக, அவர் தற்போது தீவிரமாகக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திமுக தனது வேட்பாளரை நேரடியாக இறக்கி போட்டியிட்டிருந்தால் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று மதுரை திமுகவினர் சொல்கின்றனர்.

திருப்பரங்குன்றத்தை எதிர்பார்க்கும் பாஜக?

அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக, திருப்பரங்குன்றம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை முன்வைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பரங்குன்ற மலை விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதனால், பாஜக திருப்பரங்குன்றம் தொகுதியை தங்களுக்காக கேட்க உறுதியாக உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ள தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை தங்களுக்கு வழங்குமாறு பாஜக, அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 —   மணிபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.