அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை: ஆன்மீகம் அல்ல; அரசியலே! 

திருச்சியில் அடகு நகையை விற்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தை மிகுந்த வருத்தத்தோடு பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், இது முழுமையாகத் தமிழ் பண்பாடுகள், தமிழ் கலாச்சாரம், கோயில் ஆகமங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் எதிரான ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது.

இந்த சர்ச்சையின் அடிப்படையில் எந்தவிதமான உறுதியான அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை. விரும்பத்தகாத, சமயரீதியான கோயிலுக்குப் புறம்பான அரசியலும், அதை ஒட்டிய சட்டச் சிக்கல்களும் மட்டுமே இதற்கு அடிப்படையாக இருக்கின்றன.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதனால் தான், ஆன்மீகத்தில் ஈடுபட்டிருக்கிற எங்களைப் போன்றவர்கள் இதில் பேசுவதைத் தவிர்த்து வந்தோம்.

சர்ச்சையின் அடிப்படை:  நியாயமற்ற அரசியல் கோரிக்கை இது முழுக்க முழுக்க முருகப்பெருமான் என்கின்ற தமிழ்க் கடவுளுடைய கோயிலிலே நடைபெறுகின்ற ஒன்று.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தேவையில்லாத சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமே ஆகாது; அது தமிழகத்தின் சூழலுக்கும் ஒவ்வாத ஒன்றாகும்.

திருப்பரங்குன்றம் மலை
திருப்பரங்குன்றம் மலை

இப்போது அரசியல்வாதிகள் சிலர் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால், கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றும் இடத்துக்கு மாறாக, தர்கா பக்கத்திலே ஏற்ற வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் அந்தப் பிரச்சனைக்குள் செல்ல விரும்பவில்லை.

ஆனால், நீங்கள் தர்கா பக்கத்திலே ஏற்ற வேண்டிய அந்த இடத்தின் நிலை என்ன?

1923ஆம் ஆண்டு பிரிவியூ கவுன்சில் சென்று வந்த வழக்குகள் இருக்கின்றன. (1923 முதல் 1931 வரை லண்டன் பிரிவியூ கவுன்சிலில் நடைபெற்ற வழக்கு)  அதன் பின்னாலே ஏறத்தாழ 20 வழக்குகள் 2017 வரைக்கும் வந்திருக்கின்றன.

ஆனால், 1923லிருந்து இன்றுவரை, அங்கே தர்கா அருகில் தீபம் வைக்க வேண்டும் என்று சொன்னதை யாருமே ஒப்புக்கொள்ளவில்லையே! அந்த பிரிட்டிஷ் கால நீதிமன்றமும் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு வந்த இந்திய திருநாட்டிலே வந்த எல்லா நீதிமன்றங்களும் அது ஏற்றது அல்ல என்று தான் சொல்கின்றன.

வரலாறு மற்றும் சட்டரீதியாக ஏற்கப்படாத ஒரு கோரிக்கையை மீண்டும் மீண்டும் எழுப்புவது, அரசியல் ஆதாயங்களை நோக்கிய செயல் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தீபத்தூணா, ஜோதித்தூணா?

ஆன்மீகத்திற்கும் பொது அறிவிற்கும் இடையிலான முரண் இந்த வழக்குகள் எல்லாம் வந்தபோது, அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் இருப்பது ஒரு தூண் என்று தான் சொல்லப்பட்டது. இவர்கள் சமீபகாலமாகத்தான் அதை ‘தீபத்தூண்’ என்று புதிய பெயரை அதற்கு வழங்குகிறார்கள்.

அந்தப் பெயரில் அது விளங்கியதா என்பதற்கு இதுவரைக்கும் எந்த ஆதாரமும் இல்லை. ‘தீபத்தூண்’ என்று வருமானால், மிக முக்கியமான ஒன்றை நமது பொது அறிவே (Common Sense) சொல்லும்.

தீபம் என்பதும் ஜோதி என்பதும் ஒன்றா? 

அகல் விளக்கிலே ஏற்றினால் அது தீபம். தீபம் என்பது சின்னதாக ஒரு திரி போட்டு, சிறியதாக எரிவது. இவ்வளவு பெரிதாக ஏந்தினால் அதன் பெயர் ஜோதி. இன்று எல்லா இடத்திலும் நாம் பார்க்கிறோம். மலை உச்சியில் ஏற்றுகிற திருநாமம் என்பது, சிறிய அகலாக வைக்கப்படுவதில்லை. அது அவ்வளவு பெரிய அருட்பெருஞ்ஜோதியாக வரவேண்டும்.

அது,  ஒரு அருட்பெருஞ்ஜோதியாக ஆண்டவன் இருக்கிறான் என்ற ஒன்றை நினைவுபடுத்துவதற்காக ஏற்றுகிற ஒன்று. அந்த மலை மீது ஏற்றுவதற்கு ஒரு பெரிய கொப்பரை வருகிறது. துணியை எடுத்து வைத்துச் சுற்றுகிறார்கள். அதன்பிறகு நெய்யை 500 லிட்டர், 600 லிட்டர் எடுத்து ஊற்றுகிறார்கள். அப்படியானால், அது ஒரு சிறிய தீபமாக இருக்க முடியுமா?

தீபம் என்பது வீட்டில் வைத்துக்கொள்வது. அதனால் தான் கார்த்திகை மாதத்திலே வீடுகளில் வைப்பதால், அதற்கு கார்த்திகை தீபம் என்று பெயர் வந்தது. ஆனால், மலையில் ஏற்றுவது ஜோதி, அருட்பெருஞ்ஜோதி. அந்த சொற்களிலேயே நமக்கு விடை கிடைக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அப்படியானால், நீங்கள் காட்டுகிற இடத்தில் ஜோதி ஏற்ற முடியுமா என்று சொல்லுங்கள். அங்கே நீங்கள் காட்டுகிற தூணில், ஜோதி ஏற்றுவதற்குரிய அந்த மிகப்பெரிய கொப்பரைகள் சார்ந்து இருப்பதற்கான, முட்டுக் கொடுத்து மேலே ஏற்றி அவ்வளவு பெரிய ஜோதியை உண்டாக்குவதற்கு எந்தவிதமான அறிகுறியுமே இல்லையே!

நில அளவை கல் -திருப்பரங்குன்றம்

அந்தத் தூணில் அதிகபட்சம் போனால் ஒரு குழிவு இருக்கிறது என்கிறார்கள். அது அதிகபட்சம் போனால் 500 மில்லி லிட்டருக்கு மேல் கூட எண்ணெய் பிடிக்காது என்கிறார்கள். அந்த  500 மில்லி லிட்டரை ஏற்றினால் உலகத்துக்கு ஜோதி தெரியுமா?

அது மழை பெய்தால் காலி, காற்று அடித்தால் காலி. அதில் போய் ஏற்றி எல்லோரும் கும்பிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இந்த அடிப்படை விதியை இந்தச் சர்ச்சைக்குரிய கோரிக்கை சிதைக்கிறது.

முரண்படும் தீர்ப்பு,  ஆகமங்கள் மற்றும் அரசின் கடப்பாடு இந்தச் சர்ச்சை 1923-லிருந்து நீண்டு கொண்டிருக்கிறதென்றால், எதனால் வருகிறது?

இதற்கு அடிப்படை என்பது கோயிலோ, கோயிலில் இருக்கிற முருகப்பெருமானோ, பக்தியோ அல்ல. இது அரசியல் என்கின்ற ஒன்றிலே காலூன்றி எழுகிறது.

சமீபத்தில் வந்த தீர்ப்புக்கூட, “நீங்கள் அங்கே போய் ஏற்றுங்கள்” என்று சொல்லும்போது, யாரை ஏற்றச் சொல்கிறார்கள்? கோவில் நிர்வாகத்தை போய் ஏற்றச் சொல்கிறீர்களா? “கோவில் ஏற்றினால் ஏற்றட்டும், இல்லையென்றால் இந்த மனுதாரர் போய் ஏற்றட்டும்” என்கிறார். அப்படியானால், அந்தத் தீர்ப்பிலேயே அதனுடைய ஆன்மீக அடிப்படை நீர்த்துப் போகிறது. கோவில் நிர்வாகம் ஏற்றட்டும், இல்லையென்றால் மனுதாரர் ஏற்றட்டும் என்ற நிலை உருவாகும் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும் என்று அரசு நினைக்கிறது. ஆக, தீர்ப்பும் அரசினுடைய கடப்பாடும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது.

சத்தியவேல் முருகனார்
சத்தியவேல் முருகனார்

இதில் ஆகமம் என்பது எங்கே? கோயிலுக்குள் ஏதாவது வழிபாடு நடந்தால் அது ஆகமம். வெளியே வந்து ஒரு மலை உச்சியில், ‘இந்த இடத்தில் தர்கா பக்கத்தில் தான் ஏற்ற வேண்டும்’ என்று ஆகமம் எழுதுமா? ஆகமம் சொல்லாது.

ஜோதியானது, உரிய ஆகம அறிஞர்களால், ஆன்மீக உள்ளுறையை வைத்து, அது பெருமானுடைய உச்சித் தலைக்கு நேராக எங்கே  எது நேராக இருக்கிறதோ, ஒரு பொது அறிவோடு, இந்த இடத்தில் ஏற்றலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

உச்சிப் பிள்ளையார் கோயில் மேல் ஏற்றுவது பல காலமாக இருக்கிற ஒரு மரபு. தொன்று தொட்டு வரும் நல்லிணக்கத்தின் சான்றுகள். எனவே, இப்போது எழுப்பப்படுவது எந்த விதத்திலும் அடிப்படை இல்லாத ஒரு சர்ச்சை. இது அனைத்து தமிழ் பண்பாட்டிற்கும், தமிழ் வழிபாட்டிற்கும், தமிழ் வழிபாட்டின் ஆகமக் கோட்பாடுகளுக்கும் ஒரு விதத்திலும் ஒத்து வருவதாக இல்லை.

இங்கே தீர்வு என்பது, இது ஒரு சமயரீதியான ஒரு வழிபாட்டு முறை என்ற அடிப்படையில், தீர்வை சமயரீதியாகத்தான் கேட்க வேண்டுமே தவிர, சட்ட ரீதியாக கேட்க முடியாது. திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய பகுதி மக்கள், இந்துக்களாக இருக்கட்டும், இஸ்லாமியர்களாக இருக்கட்டும், அவர்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். நூறாண்டு காலமாக அந்த  ஒற்றுமை தொடர்ந்து வருகிறது, துலங்கி வருகிறது.

சிக்கந்தர் என்கின்ற அந்த மன்னன், அவன் அரசைத் துறந்துவிட்டு, மலை மேலே வந்து அமர்ந்தான் என்று வரலாற்றுப் பிரகாரம் பிரிவியூ கவுன்சிலில் ரெக்கார்டு ஆகியுள்ளது. அந்த மன்னன் ஒரு நாளாவது இந்த கோவில் விவகாரத்திலே தலையிட்டிருக்கிறானா?

திருப்பரங்குன்றம்: தர்காஇதையெல்லாம் தாண்டி, தன்னை இறைவனிடம் ஒப்புவித்து, ஒரு சந்நியாசி போல, துறவு எடுத்துத்தான் அங்கே போய் உட்கார்ந்து விட்டான். அதனால் இயல்பாகவே அந்த மக்களிடத்திலும் அந்த உணர்வு வருகிறது.

இந்துக்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையாக இருப்பது ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. பரிபாடலில் வருகிறது, ‘எல்லோரும் – இது மலை அல்ல, இதுவே மகாதேவன், இந்த மலையே முருகன் என்ற உணர்வில் வலம் வந்து வழிபாடு செய்வார்கள்’ என்று சொல்கிறது.

இன்றும், இஸ்லாமியர்கள் பிள்ளை வரம் கேட்டு மலையைச் சுற்றி வருகிறார்கள். ஆக, அது இயல்பாக வந்த ஒன்று. ஆற்றொழுக்காக வந்த ஒன்று. இப்போது, இவர்கள் மடைமறித்து, இடைமறித்து ஏதாவது இடையூறு செய்யலாம் என்று நினைத்தால், அது அவரவருடைய குணநலனைக் குறிக்கிறது.

நியாயம் செத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

—  முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.