தீராத நோய்கள் தீர்க்கும் திருவான்மியூர் மருத்தீஸ்வரர் ஆலயம்! – ஆன்மீக பயணம்
சென்னை திருவான்மியூரில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோயில் மருதீஸ்வரர் கோவில். இங்கே உள்ள சிவன் சுயம்புவாக உருவானவர். இந்த சுயம்பு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பு காமதேனு என்னும் தேவலோகத்து பசு தினமும் பால் சொரந்து வழிபட்டதால் இவருக்கு பால் வண்ண நாதர் என்னும் திருநாமமும் உண்டு.
வால்மீகி முனிவர் தவமிருந்த இடம்தான் இந்த இடம். அவர் பெயரிலேயே திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது. 275 பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இந்த மருதீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும் திருஞானசம்பந்த பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர். அருணகிரி நாதரும் குசமாகி என்று தொடங்கும் திருப்புகழை பாடி இங்கே உள்ள சுப்பிரமணியரை வழிபட்டார்.
இந்த கோவிலில் விநாயகர், முருகனுக்கு சிறிய சன்னதிகள் உள்ளன. இங்கே உள்ள அம்பாள் திருபுரசுந்தரி என்னும் திருநாமத்தால் வணங்கப்படுகிறார். மூன்று கால கட்டங்களையும் கட்டுப்படுத்தும் மூன்று விநாயகர்களும் ஒரு சன்னதி உள்ளது. இந்த கோவிலின் முக்கியமானதொரு சிறப்பு அம்சமாக மூலவரின் பிரசாரத்தில் 108 சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன.
இங்கே தலவிருட்சம் வன்னி மரம். இந்த வன்னி மரத்தருகே தான் ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இங்கே சுவாமி அபிஷேகத்திற்கு தூய பசும்பால் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்காக இங்கேயே ஒரு கோ சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஆண்டுகளுக்கு முன் திருமறைகளை பாடும் திருமறை மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே இந்த மாதிரி திருமறை மண்டபம் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆலயத்தில் தான் உள்ளது. இது கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு 2001 இல் மருதீஸ்வரர் கோவிலில் திருமறை மண்டபம் அமைக்கப்பட்டது. தேவராசிரியன் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் வருடம் 315 நாட்களும் சைவ சித்தாந்த சொற்பொழிவு ஆற்றப்படுகின்றன. இந்த ஆலயத்தில் திருமுறைகள் பாடி ரிஷப தண்டம் ஏந்தி ஆலயத்தை வளம் வருவது தினசரி நடைபெறுகிறது. 2001 இல் இருந்து 2009 வரை ஏழு முறை ரிஷப தண்டம் அடியாரின் கையில் இருந்து நழுவி தானே கீழே ஊன்றி நின்று கொள்ளும் அற்புத நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இப்போது 16 வருடங்கள் கழித்து 6.8.25 பிரதோஷம் அன்று ஆலயத்தை ரிஷப தண்டத்துடன் பிரதோஷ வேலையில் வலம் வரும்போது தேவாசிரியன் மண்டபம் எதிரே ரிஷப தண்டம் அதை சுமந்து வந்த அடியாரின் கையில் இருந்து நழுவி பூமியில் தானாக நின்றது. கோவில் நடை சாத்தும் வரையில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரங்கள் வரை அப்படியே நின்றது. அது இறைவன் நிறைவேற்றிய மிகவும் அதிசயமான அற்புதமான நிகழ்வாக கருதப்படுகிறது.
பக்த கோடிகள் தொடர்ந்து தேவாரம் திருவாசக பாடல்களை பாடியவாறு ரிஷப தண்டத்தை தரிசித்தனர். முடிவில் தீபாராதனை காண்பித்து பூமியிலிருந்து ரிஷப தண்டத்தை எடுத்தார்கள். இதை இறைவன் நிகழ்த்திய மிக அற்புதமான நிகழ்வாக பக்தர்களால் கருதப்படுகிறது. இதைப்பற்றி கேள்விப்பட்டு ஏராளமான பக்த கோடிகள் பிரதோஷத்தன்று மருதீஸ்வரர் கோவிலுக்கு வந்து தானாக பூமியில் ஊன்றி நிற்கும் ரிஷப தண்டத்தை தரிசித்து செல்கிறார்கள். நீங்களும் ஒருமுறை சென்னை சென்று திருவான்மையூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரரை கண்டு தரிசித்து வாருங்கள். இங்கு ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் பாலை அருந்தினால் தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகமாக உள்ளது.
— பா. பத்மாவதி







Comments are closed, but trackbacks and pingbacks are open.