தூத்துக்குடியில் தொடங்கிய பறவைகள் கணக்கெடுப்பு முகாம் !
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து நீலச்சிறகு வாத்து நம்ம ஊரு வேய்ந்தான் குளத்திற்கு வந்து விட்டது. அது மட்டுமா எவரெஸ்ட் சிகரத்தைக் கடந்து வரித்தலை வாத்து விஜய நாரயணம் குளத்தில் முகாமிட்டுள்ளது.
தூத்துக்குடி பெருங்குளத்தில் நீளமான அலகைக் கொண்ட ஐரோப்பா தேச பறவையான கருவால் மூக்கன் சுறு சுறுப்பாக இரை தேடிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த பறவைகள் நம் ஊருக்கு வருகின்றன? என்ன வகையான பறவைகள் நம் குளங்களில் காணப்படுகின்றன? பொதுவான பறவைகள் எவை? மற்றும் அரிதான பறவைகள் எவை? என எண்ணற்ற கேள்விகள் நம் உள்ளங்களில் எழலாம்.
இவற்றிற்கு விடை காண கலந்து கொள்ளுங்கள் 15வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பில். திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழு, முத்து நகர் இயற்கை அமைப்பு, தூத்துக்குடி, நெல்லை இயற்கைச் சங்கம், திருநெல்வேலி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி மற்றும் ஈக்கோ ஜெசியூட், மதுரை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஜனவரி 24,25,26 ஆகிய தேதிகளில் இக்கணக்கெடுப்பினை நடத்துகிறார்கள்.
இக்கணக்கெடுப்பு குறித்த பயிற்சி தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
கடந்த வருடங்களில் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் மட்டுமே நடைபெற்றது, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் பங்கேற்பை அதிகரிக்க இம்முறை அம்மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதை தொடா்ந்து தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 15வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
முத்துநகர் இயற்கை அமைப்பு, தூத்துக்குடி, நெல்லை இயற்கைச் சங்கம், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் , தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை ஆகிய அமைப்புகளின் சார்பில் தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணி பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இப்பணிகள் ஜனவரி 26ஆம் தேதி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள், பறவைகள் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
— மணிபாரதி.